ads



பிப்:11ல் கத்தர் கா.ந. மன்றம், ஹாங்காங் ஐக்கிய பேரவை மற்றும் ஷிஃபா அமைப்புகள் இணைந்து நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பரிசோதனை முகாம்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் டிரஸ்ட், திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம், திருச்சி ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவைகளுடன் இணைந்து காயல்பட்டணம் கே.எம்.டி மருத்துவமனை இணைந்து வருகின்ற 11ஆம் தேதி புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை நடத்த உள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி :

முன்னதாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வருகின்ற 10ஆம் தேதி மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை காட்டுதைக்கா தெரு செண்டு ஆலிம் பெண்கள் தைக்கா மற்றும் தைக்கா தெரு மன்ஸகுன் நிஸ்வான் பெண்கள் தைக்கா ஆகிய இடங்களிலும், அதே தினம் (10.02.2018) மாலை 7:00 மணி முதல் 8 மணி வரை ஆறாம்பள்ளித் தெரு வாவு பெண்கள் தைக்கா மற்றும் சதுக்கைத் தெரு சதக்கதுல்லாஹ் அப்பா பெண்கள் தைக்காவிலும் நடைபெற உள்ளது.

புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் :

அதனைத் தொடர்ந்து 11.02.2018 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கே.எம்.டி. மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருச்சி ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்து டாக்டர் ஜி. கோவிந்தராஜன் M.B.B.S., M.S., M.Ch., மற்றும் டாக்டர் பி. சசிப்பிரியா M.B.B.S., M.D., DMRT (Radiation Oncology) பங்குபெற்று மருத்துவ பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்கள்.

இம்முகாமில் மகளிருக்கு கர்பப்பைவாய், மார்பக புற்றுநோய் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு PSA பரிசோதனை இலவசமாக செய்யப்பட உள்ளது.

இலவச பரிசோதனை செய்வதற்கு முன்பதிவு செய்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் கிடைக்குமிடங்கள்...

ஷிஃபா அலுவலகம் (சதுக்கைத் தெரு), கே.எம்.டி. மருத்துவமனை, இக்ராஃ அலுவலகம் (கீழநெய்னார் தெரு), முhஷித் ஜெராக்ஸ் (கூலக்கடை பஜார்), மன்னர் ஜூவல்லர்ஸ் (அல் ஜாமிவுல் அஜ்ஹர் எதிரில்), ஃபஸீஹா ஏஜன்ஸி (நெய்னார் தெரு) மற்றும் முஹம்மது டிராவல்ஸ் (பேரூந்துநிலையம் எதிரில்).

டோக்கன் பெற்று, முகாம் அன்று முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தகவல் :
ஹாஃபிழ் A.H.S. ஹபீப் முஹம்மது நஸ்ருத்தீன்.
துணை பொருளார் - கத்தர் காயல் நல மன்றம்.
8 Feb 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top