குத்துக்கல் தெருவை சார்ந்த மௌலவி ஊண்டி செய்து முஹம்மது ஆலிம் பாக்கவி (74) இன்று (10/01) மாலை 5 மணியளவில் நாகர்கோவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார் மர்ஹூம் அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் மொகுதூம் முஹம்மது அவர்களின் வாப்பாவும், தேல்சாப்பு செய்யது உமர் (TSO), S.T. ஃபாரூக் (ரியாத்), தோல்சாப்பு முஹியத்தீன் அப்துல்காதர், M.A.சுல்தான் (பிஸ்மி ஜெம்ஸ்), பிரபு செய்யது முஹைதீன் ஆலிம், நோனா முஹம்மது லெப்பை, ஊண்டி K.M.சாலிஹ் ஆகியோரின் மாமனார் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (11/01) காலை 11 மணியளவில் கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
11/01/2014 - 09:32 கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது.
தகவல் :
சகோ.சட்னி செய்யது மீரான்.
சகோ.சட்னி செய்யது மீரான்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆலிம் பெருந்தகையின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் (ஜல்) மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மரியாதை மிகு உஸ்தாத் அவர்களின் வபாத் செய்தி அறிந்து அதிர்சிக்குள்ளானோம். இப்புவியில் பிறந்த அனைவரும் மரணத்தை எதிர்கொள்ள கடமைப்பட்டவர்களே என்ற அடிப்படயில் நாம் அனைவரும் சபூர் செய்து கொள்வோமாக.
வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் உயரிய சுவன பதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன்.
குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானக -ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
Assalamualaikkum
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன், ஹசரத்அவர்களின் மறைவு செய்தியை கேட்டு மிகுந்த அதிசிக்குள்ளானேன், நான் ஊர் வரும்பொதெலாம் அன்போடும் பாசத்தோடும் என்னை விசாரிப்பார்கள். ஹசரத்அவர்களின் மறைவு நமது ஊருக்கும் மற்றும் சமுதாயத்துக்கும் பேரிழப்பாகும். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் நல உயர் பதவியை அருள்வானாக ஆமீன். அன்னார் குடும்பத்திற்கு ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன்.
Sarvej Kudack Mohudoom Mohamed
Kuwait
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .அல்லாஹ் அன்னாருடைய பாவங்களை மன்னித்து அவர்களை சுவர்கதிலே உயர்ந்த சுவர்கமான ஜன்னத்துல் பிர்தௌசில் நுழைய வைப்பானாக ஆமீன்.
s a m mohideen தம்பி
jeddah
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எங்கள் அன்புக்கும் மரியாதைக்குரிய.அல்ஹாஜ் செய்குனா.ஊண்டி M.M.செய்யது முஹம்மது ஆலிம் பாக்கவி அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும்.....மன கவலையும் அடைந்தோம் .
வல்ல இறைவன் கட்டளைக்கு இணங்கி நடந்த இந்நிகழ்விற்கு நாம் அனைவர்களும் பொறுமையினை கடைபிடிப்போம்....
வல்ல நாயன் மர்ஹும் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்......
மேலும் மர்ஹும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் பொறுமையினை வழங்கிடுவானாகவும் ஆமீன்.
நான் நம் மரியாதைக்குரிய.அல்ஹாஜ் செய்குனா.ஊண்டி M.M.செய்யது முஹம்மது ஆலிம் பாக்கவி அவர்களை தற்போது தான் நேரில் சந்தித்து பேசினேன் ....அந்த நிகழ்வை நினைத்ததும் என் கண்ணில் நீர் கோர்க்கிறது .......
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆலிம் பெருந்தகையின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். வல்ல நாயன் மர்ஹும் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை நல்கிடுவானாக ஆமீன்.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூர் என்னும் அழகிய பொறுமையை வல்ல ரஹ்மான் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்
அன்னாரின் மண்ணறையை அல்லாஹ் ஒளிமயமாக்கிவைப்பானகவும் ஆமீன்