
தீவுத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் பிரபு சுல்தான் மஹ்மூது நெய்னா (79) அவர்கள் இன்று (26/07) அதிகாலை 03:20 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் முன்னாள் செயலாளரும், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் நிர்வாகியும், குருவித்துறை பள்ளி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் முன்னாள் செயலாளருமாவார்கள்.
அன்னார், மர்ஹூம் அல்ஹாஜ் பிரபு முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்ற பிரபு அப்பா அவர்களின் மகனும், மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் N.K. காதிர் ஸாஹிப் ஆலிம் அவர்களின் மூத்த மருமகனாரும், ஹாஜி பிரபு முஹ்யித்தீன் அப்துல் காதிர், பிரபு முபாரக் காதிர் ஸாஹிப், ஹாஃபிழ் பிரபு முக்தார் இப்றாஹீம் ஆகியோரின் தந்தையும், மர்ஹும் அல்ஹாஜ் K.S. முஹம்மது நூஹ் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும், அல்ஹாஜ் K.S. மொகுதூம் முஹம்மத், அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் K.S. கிழுறு முஹம்மத் ஆலிம் ஃபாஸீ, அல்ஹாஜ் வாவு M.M. முஹ்தஸிம் ஆகியோரின் சம்பந்தியும், மர்ஹூம் தம்பான் M.E. முஹம்மத் இஸ்மாஈல், அல்ஹாஜ் K.S. செய்யித் அப்துர் ரஹ்மான் ஆகியோரின் மச்சானும், அல்ஹாஜ் S.H. முஹம்மத் நூஹ், அல்ஹாஜ் M.S. முத்துவாப்பா, அல்ஹாஜ் S.A. ஷெய்க் சுலைமான் ஆகியோர்களின் சகலையும், ஹாஃபிழ் பிரபு சுல்தான் ஜமாலுத்தீன், ஹாஃபிழ் பிரபு முஆத் மக்தூம், ஹாஃபிழ் பிரபு முஅவ்வித் மப்ரூக், பிரபு சுல்தான் மஹ்மூத் நெய்னா முபாரக், பிரபு சுல்தான் மஹ்மூத் நெய்னா முக்தார், பிரபு கிழுறு முஹம்மத், பிரபு முஹ்தஸிம் மில்ஹான் ஆகியோரின் வாப்பிச்சா அப்பாவும், M.I முஹம்மது இப்ராஹிம், அல்ஹாஜ் SAR. காதர் சாஹிப், மர்ஹும் M.I. முஹ்யித்தீன் அப்துல் காதிர், SAR. மின்ஹாஜ் முஹ்யித்தீன் ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு குருவித்துறை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அன்னாரின் குடும்பத்தார் அறியத் தருகிறார்கள்.
அல்லாஹும்மக்ஃபிர் லஹூ வர்ஹம்ஹூ.
வாசகர்கள் கருத்து