
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கு 18.12.2019 அன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமைத் தாங்கினார். இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவி செல்வி M.A. ஹமீதா சப்ரீன் கிராத் ஓத தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.
நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான், செயலர் வாவு M.M மொகுதஸீம் M.A(CS), துணைச்செயலர் ஹாஜி ஹாஃபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A. Azhari (Egypt), முதல்வர் முனைவர் திருமதி. R.C. வாசுகி M.A., Ph.D.,DGT. மற்றும் கல்லூரியின் இயக்குநர் முனைவர். திருமதி. மெர்சி ஹென்றி M.A.,Ph.D. அவர்கள் முன்னிலை வகித்தனார்.

இயற்பியல் துறை தலைவர் திருமதி S. வசுமதி M.Sc., M.Phil., B.Ed., P.G.D.C.A அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி.R.C. வாசுகி M.A., Ph.D.,DGT அவர்கள் விழாவின் தொடக்கவுரையினை வழங்கினார். ஐன்ஸ்டீன் அறிவியல் கழகச் செயலர் செல்வி T. கோகிலா ஜெனிபர் M.Sc., B.Ed. சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் செயலர் வாவு M.M. மொகுதஸீம் M.A(CS), அவர்கள் தலைமை உரையினை வழங்கினார்.

கல்லூரியின் இயக்குநர் முனைவர் திருமதி மெர்சி ஹென்றி M.A.,Ph.D. அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முதல் அமர்வில் சிறப்பு விருந்தினர் அறிவியலாளர் P.மொர்தெகாய், அவர்கள் ஒளிர்வு கால அளவீடு ஆய்வகம் என்ற தலைப்பில் ஒளிர்வு காலஅளவீட்டின் மூலம் காலநிலைகளை அளவிடும் கொள்கைமுறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து சிறப்பாக உரையாற்றினார். மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
முதல் அமர்வின் நிறைவாக நன்றியுரையினை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் திருமதி சு.சுஜாதா M.Sc., M.Phil., B.Ed. அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வில் சிறப்பு விருந்தினர் சாயர்புரம், போப்ஸ் கல்லூரி, இயற்பியல் ஆய்வகத் துறை தலைவர் முனைவர் J. ஜெபராஜ் தேவதாசன் அவர்கள் “அம்மோனியா வாயு சென்சார்” என்ற தலைப்பில் சென்சார் அமைப்பின் கொள்கைகள், செயல்படும் விதம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கவுரை ஆற்றினார். சென்சார் அமைப்பினைப் பற்றிய தெளிவான அறிவினை மாணவர்கள் பெற்றனர். அதனைத் தொடர்ந்து வெவ்வெறு கல்லூரி மாணவிகள் கருத்தரங்கை பற்றிய பின்னூட்டத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் அளிக்கப்பட்டது. இயற்பியல் துறை உதவி பேராசிரியர் திருமதி. S.V. சிவ அபிநயா M.Sc., M.Phil.. அவர்கள் நன்றியுரை வழங்கினார். இரண்டாம் ஆண்டு மாணவி M. ஹஜி சப்ரின் துஆ ஓத, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
வாசகர்கள் கருத்து