தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில் மற்றும் பணிகளின் நிமித்தமாக ஹாங்காங்கில் வாழ்ந்துவரும் தமிழர்கள் பங்கேற்கும் வகையில் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் சார்பாக ஐவர் கால்பந்து போட்டிகள் ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளாக டிசம்பர் 1ஆம் தேதி நடத்தபட்டது.
ஜூனியர் பிரிவில் 4 அணிகளும், சீனியர் பிரிவில் 5 அணிகளும் என மொத்தம் 9 அணிகளில் 70 வீரர்கள் பங்கேற்றனர். லீக் முறையில் நடத்தப்பட்ட முதல் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
பின்னர் நடைபெற்ற ஜூனியர் பிரிவின் இறுதிப் போட்டியில் புளூ மற்றும் பிங் அணிகள் விளையாடின. இதில் புளூ அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைபெற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற சீனியர் பிரிவு இறுதிப் போட்டியில் கிரீன் அணியினரும், மெரூன் அணியினரும் விளையாடினார்கள். இந்த போட்டியில் கிரீன் அணியினர் 3-1 என்ற கோல் கண்கில் வெற்றிபெற்றனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இறைமறை வசனத்தை ஹாஃபிழ் அப்துல் காதர் ஓதினார். வந்திருந்த அனைவரையும் ஜஹாங்கிர் வரவேற்றதோடு, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து போட்டித்தொடரின் சிறந்தவீரராக ஜூனியர் பிரிவில் அப்துல் காதர், சீனியர் பிரிவில் பசீர் தேர்வு செய்யப்பட்டு, சகோ M.S. வாவு மற்றும் சகோ. அஜீஸ் ஆகியோர்களால் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்.
போட்டித்தொடரின் சிறந்த இளம் வீரராக ஜூனியர் பிரிவில் இயாஸ், சீனியர் பிரிவில் மீரான் தேர்வு செய்யப்பட்டு, சகோ அர்ஷத் மற்றும் சகோ மக்பூல் ஆகியோர்களால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து இரண்டு பிரிவுகளிலும் வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணியின் வீரர்களுக்கு பதக்கங்களை சகோ முத்து இப்றாஹீம், சகோ M.S. இஸ்மாயில், சகோ A. அபூபக்கர் மற்றும் சகோ ஹபீப் ரஹ்மான் ஆகியோர்கள் வழங்கி சிறப்பித்தனர்.
இரண்டு பிரிவுகளிலும் வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கான கோப்பையை ஜனாப் U. முஹம்மது நூகு, ஜனாப் இஸ்மாயில், ஜனாப் நூகு மற்றும் ஜனாப் A.S. ஜமால் (ஜமால் மாமா) ஆகியோர்கள் வழங்கினார்கள். இறுதியாக அணுசரனை வழங்கிய ஹாங்காங் வீ-யூனைடெட், சுவை மற்றும் ஹவுஸ் ஆஃப் கறி நிறுவனங்களுக்கும், நடுவர்களாக திறம்பட செயலாற்றிய ஜனாப் மக்பூல் மற்றும் ஜனாப் அர்ஷத் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சகோ அலி ஃபைஸல், சகோ தஸ்லீம், சகோ அர்ஷத், சகோ ஹபீப் ரஹ்மான், சகோ M.F. சாலிஹ், சகோ S.I. இப்றாஹீம், சகோ M.A. மாஹீன், சகோ ஃபஜூல் கரீம் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தார்கள்.
போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவின் அனைத்து புகைப்படங்களையும் காண இங்குசொடுக்கவும்.
வாசகர்கள் கருத்து