adsரேசன் கார்டு ஸ்மார்ட்கார்டு! விழிப்புணர்வு பதிவு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
Smart Card.JPG
ஆதார் அட்டையினை அடிப்படையாகக் கொண்டே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டு புதிதாக விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், குடும்ப தலைவர் மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கைகளை நாமே மொபைல் போன் மூலமோ அல்லது கம்ப்யூட்டர் மூலம் எளிதாக மேற்கொள்ளலாம். இதற்காக சில இடைதரகர்களை நம்பி 500 & 1000 என செலவிட வேண்டிய அவசியமில்லை.

www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், குடும்ப தலைவர் மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கைகளில் எது நமக்கு தேவையோ அதை செலக்ட் செய்து தங்களது குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவு செய்து தங்களது மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை பதிவிட்டால் நம் குடும்ப அட்டை விபரங்கள் திரையில் தெரியும்.

அதில் குறிப்பிட்ட விபரங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் ( பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் ஆகிய கோரிக்கைகளில் இரு மொழியிலும் பதிவு செய்தல் அவசியம் ) பதிவு செய்து தேவைக்கேற்றவாறு ஆதார் கார்டு, வீட்டுதீர்வை, திருமண பத்திரிக்கை போன்ற ஆவணங்களை ஸ்கேன் செய்து அட்டாச் செய்ய வேண்டும்.  

5 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெயர் சேர்க்க ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே உள்ளீடு செய்ய இயலும். கடைசியாக அதன் அடிப்பாகத்தில் தோன்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக உறுதிமொழியினை தேர்வு செய்து பதிவு செய் கொடுத்தால் ஒப்புதல் ரசீது எண் திரையில் தெரியும்.

அந்த எண்ணை குறிப்பிட்டு www.tnpds.gov.in இணையதளத்தின் Home page ல் விண்ணப்பத்தின் நிலை என்ற இடத்தில் ஒப்புதல் எண்ணை பதிவிட்டு ஒப்புதல் ரசீதினை பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம் அவ்வாறே விண்ணப்பத்தின் நிலையையும் அறிந்து கொள்ளலாம்.

தங்களின் தேவைக்கேற்ப முன்பே ஆதார் அட்டை, வீட்டுதீர்வை ரசீது, திருமண பத்திரிக்கை, இறப்புச்சான்று மற்றும் புகைப்படத்தினை 100 Mp அளவிற்குள் இருக்குமாறு ஸ்கேன் செய்து அல்லது மொபைலில் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும்  பெயர் திருத்தம் மற்றும் ஸ்மார்ட் கார்டில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை மாற்ற கண்டிப்பாக தொடர்புடைய சம்பந்தப்பட்ட (ஸ்மார்ட் கார்டு பதிவுள்ள தாலுகா அல்லது மண்டல) அலுவலகத்தில் நேரில் சென்றுதான் மேற்கொள்ள வேண்டும்.

Smart card is smart easy...
தகவல் :

திரு. R. கோபாலகிருஷ்ணன்,
வட்ட வழங்கல் அலுவலர்,
ஏரல் - தூத்துக்குடி மாவட்டம்.

தகவல் உதவி :
சகோ. M.A.K. ஜெய்னுல் ஆப்தீன்.
காக்கும் கரங்கள் நற்பணி மன்ற - நகர் நல மன்றம்
        தலைவர்                       -     நிறுவனர்.

7 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top