ஹாங்காங் மற்றும் காயல்பட்டினத்தில் We are United by Sports என்ற தாரகமந்திரத்துடன் பல்வேறு போட்டிகளை நடத்திவரும் நமது V-United Sports Academy & Clubஇளைஞர்களுக்கு 2018ஆம் ஆண்டுக்கான Kayal City Champions கால்பந்து போட்டியை கடற்கரை அருகில் அமைந்துள்ள ஹாஜி VMS லெப்பை மைதானத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் நடத்தி வந்தது.
24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற அனைத்து வயதினரும் பங்குகொள்ளும் பிரிவின் லீக் போட்டியின் முடிவில் நேற்று (28/12) காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. முதலாவது காலிறுதிப் போட்டியில் C-United அணியும் V-UnitedSingapore அணியும் எதிர்கொண்டன. இப்போட்டி சமநிலையில் முடிவுற்றதால், சமநிலைமுறிவு முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் V-United Singapore அணி வெற்றிபெற்றது.
இரண்டாவது காலிறுதிப் போட்டியில் Celtic FC அணியும் Spanish Soccer "A" அணியும் எதிர்கொண்டன. இப்போட்டி சமநிலையில் முடிவுற்றதால், சமநிலைமுறிவு முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் Spanish Soccer "A" அணி வெற்றிபெற்றது.
மூன்றாவது காலிறுதிப் போட்டியில் Quality Brothers "A" அணியும் Quality Brothers "B" அணியும் எதிர்கொண்டன. இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் Quality Brothers "B" அணியினர் வெற்றிபெற்றனர்.
அதனைத் தொடர்ந்து 14 வயதுக்குற்பட்ட சிறுவர்களுக்கான இறுதிப் போட்டியில் Bell School அணியும், V-United "A" அணியும் விளையாடின. இப்போட்டியில் V-United "A" அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, Kayal City Champions 2018 பட்டத்தை வென்றனர்.
பின்னர் அனைத்து வயதினரும் பங்குகொள்ளும் பிரிவின் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் V-United Singapore அணியும், Quality Brothers "B" அணியும் விளையாடின. இப்போட்டியில் V-United Singapore அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் V-United "B" அணியும், Spanish Soccer "A" அணியும் விளையாடின. இப்போட்டியில் Spanish Soccer "A" அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இதன் தொடராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் V-United Singapore அணியும் Spanish Soccer "A" அணியும் விளையாடின. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. அதனையடுத்து நடைபெற்ற சமநிலை முறிவு முறையில் V-United Singapore அணி வெற்றிபெற்று Kayal City Champions 2018 பட்டத்தை வென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் துவக்கமாக அல்ஹாஃபிழ் செய்யது அஹமது இறைமறை வசனத்தை ஓதினார்.

அதனைத்தொடர்ந்து 14 வயதுக்குற்பட்ட சிறந்த வீரருக்கான பரிசினை V-United "A" அணியின் இளம் வீரர்கள் இப்றாஹீம் மற்றும் ஃபயாஸ் ஆகியோர்களுக்கு சகோ அர்ஷத் மற்றும் சகோ. தஸ்லீம் ஆகியோர் வழங்கினார்கள்.

14 வயது பிரிவில் வெற்றிக்கு முனைந்த Bell School அணியினருக்கான கோப்பை மற்றும் ரொக்கப்பரிசினை சகோ. முஹம்மது அலி மற்றும் சகோ. கைசாலி ஆகியோர் வழங்கினார்கள்.

வெற்றிபெற்ற V-United அணிக்கான கோப்பை மற்றும் ரொக்கப்பரிசினை சகோ. L.T.S. சீத்தீக் வழங்கினார்கள்.

பின்னர் அனைத்து வயதினரும் பங்குகொள்ளும் பிரிவில் வெற்றிக்கு முனைந்த Spanish Soccer "A" அணிக்கான கோப்பையை சகோ. தஸ்லீம் வழங்கினார்.

வெற்றிபெற்ற V-United Singapore அணிக்கான கோப்பையை V-United குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான சகோ.M.A.செய்யது அஹமது அவர்கள் வழங்கினார்கள். இவ்விருஅணிகளுக்கான ரொக்கப்பரிசினை சகோ. அன்சாரி அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை ஆசிரியர் மீராதம்பி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
இப்போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க உதவிய எல்லாம்வல்ல இறைவனுக்கு முதல் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அணிகள் தந்துதவியவர்களுக்கும், போட்டிக்கு அணுசரனை தந்துதவியர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட சகோ. M.A. செய்யது அஹமது, சகோ. சதக்கதுல்லாஹ், சகோ.ஜின்னா, சகோ. மாஹீன், LTS கோல்டு ஹவுஸின் உரிமையாளர் சகோ. L.T. சித்தீக், காயல்பட்டினத்தின் புகழ்பெற்ற முன்னால் கோல் கீப்பர் சகோ. அன்சாரி, Faams நிறுவனத்தின் உரிமையாளர் சகோ. M.F. சாலிஹ், United Asia நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சகோ. அர்ஷத், சகோ. மூஸா மற்றும் சகோ. நஸீர், போட்டியில் நடுவர்களாக பணியாற்றிய ஆசிரியர். ஜமால், ஆசிரியர் இஸ்மாயில், ஆசிரியர் கைசாலி, சகோ. நெய்னா, போட்டிக்கான ஏற்பாடுகளை செய்த சகோ. முஹம்மது அலி, சகோ. முஹம்மது மெய்தீன், ஆசிரியர் மீராதம்பி மற்றும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் அகடமி & கிளப்பின் இளம் வீரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
வாசகர்கள் கருத்து