எமது அட்மின் ஜஹாங்கிர் அவர்கள் தாயார் மொகுதூம் தெருவைச் சார்ந்த ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள் இன்று 31.07.2018 செவ்வாய் கிழமை அதிகாலை 03.20 மணியளவில் காலமானார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...)
அன்னார் மொகுதூம் தெருவைச் சார்ந்த "மர்ஹும் ஹிட்லர் மஹ்மூத் ஹாஜி" அவர்களின் இளைய மகளும், "ஹாஜி S.S.E. மஹ்மூத் தீபி" அவர்களின் மனைவியும், "மர்ஹும் ஹாஜி. ஹிட்லர் சாகுல் ஹமீது, மர்ஹும் ஹிட்லர் சுலைமான் லெப்பை , மர்ஹும் சுஹர வர்த்தி ஆகியோர்களின் சகோதரியும்" , "ஹாஜி ஹிட்லர் M.செய்யிது இப்ராஹீம், ஜனாப் ஹிட்லர் M. சதக்கு, ஹாஜி. M. ஹிட்லர் செய்யிது முஹம்மது புஹாரி, ஜனாப் M. அஜீஸ், மர்ஹும் ஜனாப் M. அல்தாஃப், ஹாஜி M. ஜஹாங்கீர் (5-வது வார்டு முன்னாள் கவுன்சிலர்) ஆகியோர்களின் தாயாரும், எனது மாமியாரும் ஆகிய "ஹாஜியானி M.சுல்தான் பீவி" அவர்கள் நீண்ட நாட்களாக சுகவீனமுற்று இருந்த நிலையில் தகுந்த பரிகாரம் பார்த்தும் பலனின்றி இன்று 31.07.2018 (செவ்வாய் கிழமை) அதிகாலை 03.20 மணியளவில் அல்லாஹ்வின் நாட்டம் K.M.T. மருத்துவ மனையில் வைத்து தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாஃ அளவில் சேர்ந்து விட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹும் மக்ஃபிர் லஹா வர்ஹம்ஹா.....)
நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்....
நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்து முடிந்து விட்ட இக்காரியத்திற்காக "சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை" கடைப்பிடித்துக் கொண்டோம்.
தாங்கள் அனைவரும் என் பாசமிகு மாமியார் அவர்கள் ஹக்கில் அவர்களின் கப்ரு மற்றும் மறுமை வாழ்க்கைக்காக "துஆ" செய்து கொள்ளவும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....
ِ
அல்லாஹும்மஃபிர் லஹா வர்ஹம்ஹா வஆஃபிஹி வஃபு அன்ஹா வஅக்ரிம் நுஸுலஹா வவஸ்ஸிஃ முத்கலஹா வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி.
பொருள் :- இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!
ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!
(ஆதாரம் ஹதீஸ் முஸ்லிம்-1600)
இவண்....
O.F. செய்யிது முஹம்மது ஷாதுலி,
ஜித்தா - சவூதி அரேபியா)
வாசகர்கள் கருத்து