வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக காயல்பட்டினம் விளையாட்டு வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், விளையாட்டு திறமையை மேம்படுத்தவும் கடந்த 10 ஆண்டுகளாக வல்ல இறைவனின் துணையோடும், காயல்பட்டினத்தின் விளையாட்டு மைதானங்களின் ஆதரவோடும், விளையாட்டு வீரர்களின் ஒத்துழைப்போடும் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால் போன்ற போட்டிகளை நடத்தி வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வருடம் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டியில் புதிய முயற்சியாக 13 வயதுக்குற்பட்டவர்களுக்கு பிரத்தியேகமாகவும், 15 வயதுக்குற்பட்டவர்களுக்கு பிரத்தியேகமாகவும் நடத்த திடமிடப்பட்டு முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.
இரண்டு பிரிவிளும் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த பலதினங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது அணிகளுக்கிடையேயான பயிற்சி போட்டிகள் நேற்று (24/03) முதல் நடைபெற்று வருகின்றது.
இந்த அணிகளுக்கிடையேயான காயல் பிரிமியர் லீக் போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் பள்ளிகளின் ஆண்டிருதித்தேர்வு நிறைவடைந்ததும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே நகரின் கால்பந்து ரசிகர்கள் இப்போட்டிகளை காணவருவதோடு, இளம் வீரர்களை உற்சாகப்படுத்துமாறு, வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வருடம் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டியில் புதிய முயற்சியாக 13 வயதுக்குற்பட்டவர்களுக்கு பிரத்தியேகமாகவும், 15 வயதுக்குற்பட்டவர்களுக்கு பிரத்தியேகமாகவும் நடத்த திடமிடப்பட்டு முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த அணிகளுக்கிடையேயான காயல் பிரிமியர் லீக் போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் பள்ளிகளின் ஆண்டிருதித்தேர்வு நிறைவடைந்ததும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வாசகர்கள் கருத்து