ads



பெரிய குத்பா பள்ளியில் புனரமைப்பு & புதிய கட்டுமான அடிக்கல் நாட்டு நிகழ்வு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினம் நெய்னார் தெருவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெரிய குத்பா பள்ளியில் புனரமைப்பு & புதிய கட்டுமான பணிகள் 02.02.2018 அன்று துவங்கப்பட்டது. இது குறித்து, பள்ளிவாயிலின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் கே.எம்.டீ.சுலைமான் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை கீழ் வருமாறு :-
pjm2.jpg
வங்கக் கடலலைகள் வருடிக்கொண்டே வாழ்த்தும் தங்கக் காஹிர் பதியின் மத்தியப் பகுதியில், 1265 ஆண்டுகளுக்கு முன்பு மஹான் முஹம்மது கல்ஜி ரஹ்மத்துல்லாஹி அவர்களால் கட்டப்பட்ட மிகப் பழமை வாய்ந்த வணக்கக்கூடம் நமது குத்பா பெரியப்பள்ளி.

இடவசதி இல்லாமையால், ஜூம்ஆ தொழுகை அங்கு நடத்த முடியாத சூழ்நிலை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது. எனவே, பள்ளியின் வெளிப்பகுதி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள் இடிக்கப்பட்டு புனரமைக்க, பள்ளி நிர்வாகத்தினரால் முடிவுசெய்யப்பட்டு, 02.02.2018 வெள்ளிக்கிழமை அன்று அடிக்கல் நாட்டு நிகழ்வு விமர்சையாக நடைப்பெற்றது.

சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வில், ஹாஜி R.S. அப்துல் காதர், ஹாஜி வாவு S. காதர் சாஹிபு, ஹாஜி குளம் ஷெய்கு அப்துல் காதர், ஹாஜி M.K. முஹைதீன் தம்பி, ஹாஜி M.S. அப்துல் காதர், சென்னை எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் உரிமையாளர் ஹாஜி S. அக்பர்ஷா, ஹாஜி V.I. புஹாரி, கத்தீபு மவ்லவி H.A. அஹமது அப்துல்காதர் ஆலிம், கத்தீபு மவ்லவி நஹ்வி முஹம்மது முஹைதீன் & ஹாஜி A.K. கலீல் உள்ளிட்ட காயல்பட்டினத்தின் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
pjm1.jpg
நிகழ்வின் துவக்கமாக, K.O. மஹ்மூது இறைமறை வசனம் ஓதினார். காயல் S.E. அமானுல்லாஹ் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். கத்தீபு H.A. அஹமது அப்துல் காதர் ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் :
சகோ. கே.எம்.டீ சுலைமான்.
25 Feb 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top