
சிவகாசியில் வினோத்குமார் நினைவு முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி கடந்த 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16 அணிகள் பங்கேற்றன.
இப்போட்டியில் காயல்பட்டணம் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பங்கேற்றது. அந்த அணி அரையிறுதிப் போட்டியில் சிவகாசி அணியும் வீ-யூனைடெட் அணியும் விளையாடின இதில் ஆட்டநேர இறுதிவரை இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இதனையடுத்து நடைபெற்ற சமநிலை முறிவுமுறையில் சிவகாசி அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிவகாசி அணியும், மதுரை ஐவர் கால்பந்து அணியும் விளையாடின. இதில் மதுரை அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கோப்பையை வென்றனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிவகாசி காவல்துறை ஆய்வாளர் திரு. S. கண்ணன் அவர்களும், ஸஃபாரி நிறுவன குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான திரு. A. குணசேகரன் ஆகியோர் பங்கேற்று பெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினார்கள். வீ-யூனைடெட் அணியின் கோல் கீப்பர் அபூ சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.


வாசகர்கள் கருத்து