
காயல்பட்டணம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த M. ஜமேஷா மதார், S.A. ரஹீமா ஆரிபா தம்பதியரின் மகள் J.M. ராபியத்துல் ஃபஹ்மியா, இவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல் முதுகலை (M.Sc., Zoology) பட்ட மேற்படிப்பு படித்துவந்தார்.
பல்கலைகழக தேர்வில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக அளவில் முதலிடத்தையும் (University Ist Rank), தங்கப்பதக்கத்தையும் (Gold Medal) பெற்றார். இப்பதக்கத்தை கடந்த 06-12-2017 அன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழக ஆளுனர் அவர்கள் ராபியத்துல் ஃபஹ்மியா அவர்களுக்கு வழங்கி கவுரவித்தார்கள்.
இம்மாணவி ஏற்கனவே பட்டப்படிப்பு (B.Sc., Zoology) இளங்கலையின் தேர்விலும் பல்கலைக்கழக அளவில் முதலிடமும் (University Ist Rank), தங்கப்பதக்கமும் (Gold Medal) பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராபியத்துல் ஃபஹ்மியா காயல்பட்டணம் எல்.கே. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பு மாணவிகளுக்கு ஆசிரியையாக உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
தகவல் :
ஆசிரியர் சகோ. ஜமால்,
உடற்கல்வி ஆசிரியர் - எல்.கே.மேல்நிலைப்பள்ளி.
மாஷாஅல்லாஹ்.
வாழ்த்துக்கள்! பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்!
மாஷா அல்லாஹ்.
தபாரக்கல்லாஹ்.
வல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்
டுபாயில் இருந்து மாமா
ஷேய்க்முஹம்மத்.