adsஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் காயல்பட்டணத்தில் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
AIIC2.jpg 
ஆல் இந்திய இமாம்ஸ் கவுன்சில் சார்பில் ஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் நேற்று (14/01) மாலை வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது. 'நபிகளாரின் சரித்திரம்! நித்தமும் நமக்கு அவசியம்!!' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு இமாம்ஸ் கவுன்சிலின் மாநிலத் தலைவர் மௌலவி டாக்டர் அ.ஆபிருத்தீன் மன்பயீ தலைமைதாங்கினார். காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தலைவர் அல்ஹாஜ் S.O. அபுல்ஹஸன் கலாமி, ஃபாஸி ஹாஜி, L.T. சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
AIIC1.jpg
மௌலவி M. அஹமது பைஸல் மக்தூமி கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி S.M. முஹம்மது ஃபாரூக் ஆலிம் ஃபாஸி, ஹாமீதியா மார்க்க கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மௌலவி S.H. பாதுல் அஷ்ஹாப் ஆலிம் ஃபாஸி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் N.A. தைமியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
AIIC3.jpg
நிகழ்ச்சியில் இமாம்ஸ் கவுன்சிலின் மாநில பொதுச் செயலாளர் மௌலவி M.S. ஷம்சுல் இக்பால் தாவூதி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் மு. முஹம்மது இஸ்மாயீல், நாகர்கோவில் கலாச்சார பள்ளி இமாம் மௌலவி A. ஷவ்கத் அலி உஸ்மானி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இறுதியில் மாநில செயலாளர் மௌலவி K. அர்ஷத் அஹமது அல்தாஃபி அவர்களின் நன்றியுரையாற்றினார். இப்பொதுகூட்டத்தில் சுமார் 700க்கும் அதிகமானோர் பங்கேற்றார்கள்.

தகவல் மற்றும் புகைப்படங்கள் :
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் - தூத்துக்குடி மாவட்டம்.
15 Jan 2018

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
Pst Abdulcader Says:
Jan 15 2018 6:52PM (IST)

ஹூப்பந்நபி (ஸல் )பிரச்சாரகூட்ட நிறைவு தினம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைத்து ஆலீம்களுக்கும் பெரியவர்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி ஹாதியாவின் முழுவரலாற்றை கண்முன் கொண்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் இஸ்மாயில் பாசிஸ்ட்களின் சூழ்ச்சியால் (கம்யூ ஆர்எஸ்எஸ் பாஜக) ஏற்பட்ட விளைவையும் இஸ்லாமிய சமூகம் ஒன்றுபட்டு நிற்கும் காலத்தின் கட்டாயத்தை எடுத்துரைத்த விதமும் கேட்பவருக்கும் எழுச்சியை ஏற்படுத்தியது வாழ்த்துகள் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் காலத்தின் கட்டாயம்

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top