adsகத்தர் கா.ந.மன்ற செயற்குழுவில், நிர்வாகக் குழு மறு வடிவமைப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
கத்தர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், அதன் நிர்வாகக் குழு மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை :- 
Qater logo.jpg
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 98ஆவது செயற்குழுக் கூட்டம், 05.01.2018. வெள்ளிக்கிழமையன்று, கத்தர் நகரிலுள்ள பர்வா சிட்டி பூங்காவில் மன்றத்தின் புதிய தலைவர் ஜனாப் மீரான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

ஹாஃபிழ் நஸ்ருதீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்ற செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். 
Qa1_1.jpg
துவக்கமாக புதிய தலைவருக்கு முன்னாள் தலைவர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து, முன்னாள் மற்றும் புதிய தலைவருக்கு ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜனாப் கரீம் ஹாஜியார் அவர்கள் மலர் கொடுத்து கண்ணியப்படுத்தினர். 

தலைமையுரை :- 

தம்மீது நம்பிக்கை கொண்டு இம்மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டில் நமது செயற்திட்டங்கள் வழமை போல் அல்லாமல் சற்று மாறுபட்டு புதுப்பொலிவுடனும், புதிய சிந்தனையுடனும் செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் புதிதாக வந்திருப்போர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை முக்கியத்துவமாகக் கொண்டும், நடப்பு சூழல்களைக் கருத்திற்கொண்டும் - இந்தப் புதிய ஆண்டில் நம் மன்றத்தின் நிர்வாகக் குழுவை மறுவடிவமைப்பு செய்துள்ளோம். நாம் செய்ய வேண்டிய பணிகள் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆகையால், தற்போது உள்ள வேகத்தை இன்னும் அதிகரித்து உற்சாகத்துடன் செயலாற்ற வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். தற்காலச் சூழலையும், தேவையையும் கருத்திற்கொண்டு கூட்டத்தில், பின்வருமாறு மன்றத்தின் நிர்வாகக் குழு மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. 

ஆலோசனைக் குழு: 

(1) சோனா எஸ்.எம்.இ.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
(2) எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம்
(3) எம்.என்.முஹம்மத் யூனுஸ் 

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: 

தலைவர் : 
 
கே.எம்.எஸ்.மொகுதூம் மீரான் 

துணைத் தலைவர்கள் : 
 
(1) ஏ.ஏ.செய்யித் முஹ்யித்தீன்
(2) எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் 

செயலாளர் : 
 
எம்.என்.முஹம்மத் ஸுலைமான் 

துணைச் செயலாளர்கள் :
 
(1) கே.எம்.டீ.ஷேக்னா
(2) சொளுக்கு எஸ்.எம்.முஹம்மத் இப்றாஹீம் 

பொருளாளர் :
 
பி.எம்.ஹுஸைன் ஹல்லாஜ் 

துணைப் பொருளாளர்கள் : 
 
(1) எம் ஆர் ஷாஹுல் ஹமீது 
(2) ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் 

மருத்துவக் குழு :
 
(1) இசட்.முஹம்மத் அப்துல் காதிர்
(2) ஹாஃபிழ் மஹ்மூத் லெப்பை 

கல்விக் குழு : 
 
(1) ஹாஃபிழ் எச்.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ்
(2) நாதிர் இப்ராஹிம் 

விளையாட்டு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு :
 
(1) பைசல் ரஹ்மான் 

பிரதிநிதி : 
 
எஸ்.கே.ஸாலிஹ் 

பின்னர் நகர்நலன் குறித்த பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் வரவு செலவுத் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தி பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

அனைவருக்கும் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அவர்களின் அனுசரணையில் மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. 
Qa2.jpg
புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவிற்கு அனைவரும் வாழ்த்து தெரிவிக்க, குழுப்படப் பதிவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல் : 
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி – கத்தர் கா.ந.மன்றம்)
12 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top