ads



ஐக்கியப் பேரவை சார்பில் நகராட்சி புதிய வார்டு வரைவுப் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் சார்பில் கடந்த 2ஆம் தேதி மாலை 6:30 மணியளவில் நகராட்சி வார்டு மறுவரைவு பற்றிஆய்வு செய்யும் கூட்டம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு S.செய்து அப்துர் ரஹ்மான் அவர்கள் இல்ல வளாகத்தில் நடைபெற்றது.
KIP10.jpg
இக்கூட்டத்திற்கு பேரவையின் தலைவர் ஹாஜி.S.0. அபுல் ஹஸன் கலாமி தலைமை வகித்தார்கள். ஹாஜி S.M.மிஸ்கீன் சாஹிப் ஃபாஸி, ஹாஜி வாவு S.செய்து அப்துர் ரஹ்மான் மற்றும்
பேரவையின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இறைமறை வசனத்தை அல்ஹாஃபிழ் செய்யி்து முஹம்மது ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பேரவையின் செயலர் ஹாஜி வாவு M.M.ஷம்சுத்தீன் வரவேற்புரையாற்றினார். ஜனாப் காயல் S.E. அமானுல்லாஹ் அறிமுக உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற பேரவை நிர்வாகிகள், அங்கத்தினர்கள் மற்றும் ஜமாஅத்துகள், சர்வ கட்சிகள், சமுதாய, பொது அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். நீண்ட விவாதத்திற்கும், கலந்துரையாடலுக்கும் பின்னர் 35 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் புதிதாக சமர்பிக்கப்பட்டுள்ள வார்டு மறுவரைவு பட்டியலை ஆய்வு செய்து தங்களது கருத்துக்களையும், ஆட்சேபனைகளையும், பரிந்துரைகளையும் பேரவைக்கு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு தீர்மானிக்கப்பட்டது.
KIP11.jpg
மேலும் இக்குழுவினர் நமது ஊரின் வார்டுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்ற புதிய வரைவு பட்டியல் ஒன்றையும் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் தீர்மானிக்கப்பட்டது.

இக்குழுவினரால் செய்யப்படும் முடிவுகளையும் பரிந்துரைகளையும் கோரிக்கை மனுவாக்கி, எதிர்வரும் 5 - 1 - 2018 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் நகராட்சியில் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இக்கோரிக்கை மனுவின் நகலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர்களுக்கும் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
 KIP12.jpg
சட்ட மன்ற உறுப்பினர் ஹாஜி KA.M.அபூபக்கர் அவர்கள் நிறைவுரை யாற்றினார். நிகழ்ச்சியை பேரவையின் துணைச் செயலர் ஹாஜி AAC நவாஸ் நெறிப்படுத்தினார். பேரவையின் துணைத் தலைவர் ஹாஜி S.H.பாதுல் அஷ்ஹப் ஆலிம் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
4 Jan 2018

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
Pst Abdulcader Says:
Jan 4 2018 5:41PM (IST)

மாஷா அல்லாஹ் நல்ல முயற்ச்சி விரைவில் இதற்கான பலனை அருவடை செய்வார்கள்.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top