ads



நகர்நல மன்றத்தின் நன்றி அறிவிப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
சில தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சேர்ந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்க்பட்டுள்ளதாகவும், அதற்கு உதவிடவேண்டியும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருந்தது. தற்போது அச்சிறுமி உடல்நலம் பெற்றிருப்பதாகவும், அதற்காக உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது...
KNNM Logo.jpg
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு,

சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக திருச்செந்தூர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்று 24.11.2017 வெள்ளிக்கிழமை மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடுவந்து சேர்ந்தாள். அல்ஹம்துலில்லாஹ்.

தொடர் சிகிச்சை மூலம் தான் பூரணமாக குணப்படுத்த முடியும் என்றும், உணவு கட்டுப்பாடு கண்டிப்பாக கடைபிடிக்கபட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்.

வரும் வாரம் மற்றும் டிசம்பர் மூன்றாம் தேதி மீண்டும் பரிசோதனைக்கு அழைத்திருக்கின்றார்கள். விரைவில் பரிபூரண நலமடைய அனைவரும் துஆ செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த சிறுமியின் மருத்துவ வகைக்காக பணஉதவி செய்த, அதற்க்காக முயற்சி செய்த, பல்வேறு வகையில் உதவிகள் செய்த, குறிப்பாக
''அந்த சிறுமிக்காக துஆ செய்த'' அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஜஜாக்கல்லாஹ் ஹைரா. உங்கள் அனைவரையும் அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக, ஆமீன்.

மேலும் இந்த சிறுமியின் தொடர் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும், நமது ஏற்பாட்டிலேயே செய்யவிருக்கின்றோம் (இன்ஷாஅல்லாஹ்).

நமதூரைச் சார்ந்த ஈகை குணமுள்ள ஒரு சகோதரரும் அந்த சிறுமியின் சிகிச்சைக்குரிய செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். அவருக்காகவும் நாம் துஆ செய்வோம். அல்லாஹ் நம் யாவருக்கும் சரீர சுகத்துடன் கூடிய நீடித்த ஆயுளை தந்து, ஈருலக வாழ்விலும் நமக்கு வெற்றியை தந்து அருள்புரிவானாக ஆமீன்.!!!
25 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top