ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகம் மற்றும் வீ-யூனைடெட் குழுமம் இணைந்து நடத்திய கடற்கரை கபடி போட்டியில் காயல் யுனைடெட் அணி கோப்பையை வென்றது. இது தொடர்பான விரிவான செய்தியறிக்கை :-
ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகம் சார்பில் வீ- யுனைடெட் ஸ்போட்ஸ் மற்றும் வீ- யுனைடெட் ஃபாரக்ஸ் நிறுவனம் அனுசரனையில் கடற்கரை கபடி போட்டிகள் ஹாங்காங் தீவில் உள்ள சுங் ஹாம் ஹாக் கடற்கரையில் கடந்த நவ்வம்பர் 12ம் தேதி ஞாயிற்று கிழமையன்று நடைபெற்றது.
இப்போட்டியில் காயல் யுனைடெட், ஹாங்கர்ஸ், தூத்துக்குடி டைகர்ஸ், காயல் கிங்ஸ், சென்னை ராக்கர்ஸ், சென்னை டைகர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் காயல் யுனைடெட், காயல் கிங்ஸ், சென்னை டைகர்ஸ், சென்னை ராக்கர்ஸ் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
முதலாவது அரையிறுதி போட்டியில் காயல் யுனைடெட் அணி சென்னை ராக்கர்ஸ் அணியையும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் காயல் கிங்ஸ் அணி சென்னை டைகர்ஸ் அணியையும் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

இப்போட்டியில் காயல் யுனைடெட், ஹாங்கர்ஸ், தூத்துக்குடி டைகர்ஸ், காயல் கிங்ஸ், சென்னை ராக்கர்ஸ், சென்னை டைகர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் காயல் யுனைடெட், காயல் கிங்ஸ், சென்னை டைகர்ஸ், சென்னை ராக்கர்ஸ் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

Kayal Kings
காயல் யுனைடெட், காயல் கிங்ஸ் இடையேயான இறுதி போட்டியில் காயல் யுனைடெட் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று முதலாவது வீ- யுனைடெட் கடற்கரை கபடி கோப்பையை வென்றது.

Kayal United
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காயல் யுனைடெட் அணிக்கு ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழக தலைவர் செந்தில் குமார் அவர்களும், வெற்றிக்கு முனைந்த காயல் கிங்ஸ் அணிக்கு முன்னால் தலைவர் A.S.ஜமால் (ஜமால் மாமா) அவர்களும் கோப்பையையும், பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தி பேசினர்.
இப்போட்டியை காண திரளான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஹாங்காங் தமிழ் சங்கத்தின் அங்கத்தினர் உற்சாகமாக நேரில் கலந்து கொண்டு, கண்டு ரசித்தனர். வந்திருந்த அனைவருக்கும் பேரூந்து, பகல் உணவு, மாலை தேனீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழக தலைவர் செந்தில் குமார், துனை தலைவர்கள் குமரன், இஸ்மாயில், செயலாளர் அருன், செயற்குழு உறுப்பினர்கள் தமிழ் செல்வன், அணு, வீ- யுனைடெட் நிறுவனத்தின் U. முஹம்மது நூகு ஆகியோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
செய்தியாக்கம் மற்றும் புகைப்படங்கள் :
சகோ. முத்து இப்றாஹீம்.
வீ-யூனைடெட் - ஹாங்காங்.

வாசகர்கள் கருத்து