ads

  • Welcome to Kayal Today


வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றோர் ஆசிரிய கழகக் கூட்டம்

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் 19.09.17 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரண்டாமாண்டு வணிகவியல் மாணவி M.S. பாத்திமா முனவரா கிராத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் ஆரம்பமானது. கல்லூரியின் நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் மற்றும் கல்லூரியின் துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), முன்னிலை வகித்தனர்.

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமதி சு. ஏஞ்சல் லதா M.A., M.Phil., SET. வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் செயல்பாடுகளை ஹாஜி W.M.M. மொகுதஸீம் B.A., (CS), பெற்றோருக்கு எடுத்துக் கூறினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. மாணவியர் ஏட்டுக் கல்வியோடு தொழிற்கல்வியும், பண்பாடும் பெற்று முழு ஆளுமை திறன் உள்ளவர்களாக வெளி வரவேண்டும் என்று எடுத்துக் கூறினார்.

ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெற்றோர் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே பகடிவதை (Ragging) பற்றிய விழிப்புணர்வு செல்போன் கலாச்சாரத்தின் சீரழிவுகள் போன்ற செய்திகளை எடுத்துக்கூறினார். ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. சாந்திராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிருக்கான சிறப்புச் செய்திகளை கூறினார். தொடர்ந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாக உறுப்பினர்களுக்கிடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது.

இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக செயலாற்றியல், முதுகலை ஆங்கிலம் ஆகிய துறை சார்ந்த மாணவியரின் பெற்றோர்களுக்கான கூட்டம் முதல் அமர்விலும் பொருளியல், தகவல் தொழில்நுட்பம், கணிப்பொறியியல், கணிதவியல், இயற்பியல், முதுகலை கணிதவியல் ஆகிய துறை சார்ந்த மாணவியரின் பெற்றோருக்கான கூட்டம் இரண்டாம் அமர்விலும் நடைபெற்றது. பெற்றோர் மாணவியரின் வகுப்பாசிரியரைச் சந்தித்து மாணவியர் இடைத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், வருகை பதிவு பற்றிய விவரங்களை அறிந்துகொண்டனர்.

இயற்பியல் துறைத்தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினருமான திருமதி S. வசுமதி M.Sc., M.Phil., நன்றியுரை வழங்கினார். மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி S. செய்யது அகமது பாத்திமா துஆ ஓத நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே நடைபெற்றது.
4 Oct 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top