adsகாயல்பட்டணம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) நடத்திய மருத்துவ முகாம்

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெருங் கிருபையால் காயல்பட்டணம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், சென்னை க்ரவுன் அரிமா சங்கம், முகில் அறக்கட்டளை, பில்ராத் மருத்துவமனை மற்றும் சங்கரநேத்ரலயா கண்மருத்துவமனையுடன்   இணைந்து, சென்ற ஞாயிற்றுக்கிழமை (24-09-2017) அன்று சென்னை மண்ணடியில் உள்ள மியாசி மேனிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இம்முகாமில் பொது மருத்துவம், இரத்த அழுத்தம், சர்க்கரை, கண், பல், ஈசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தன.

இதில் பொதுமருத்துவப் பிரிவில் 125 பேரும் கண் பரிசோதனையில் 127 பேரும் சிகிச்சை பெற்றனர். மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்காக 24 பேர் தேர்வுசெய்யப்பட்டு அதில் 16 பேரை முகாம் நடந்த நேரத்திலேயே சங்கரநேத்ராலயா மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.  பல்மருத்துவப் பிரிவில் 36 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.  அதைப் போன்றே ஈசிஜி பிரிவிலும் எக்கோ பிரிவிலும் பலர் பரிசோதிக்கப்பட்டனர். எக்கோ பரிசோதனையில் மூன்று பேருக்கு பாஸிடிவ் என அறியப்பட்டதால் அவர்களுக்கு மேற்கொண்டு இலவசமாக ஆஞ்சியோ செய்வதற்கு பில்ராத் மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

முகாமில் பரிசோதிக்கப்பட்டவர்களுக்காக இலவச மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. மேலும் குடும்ப வருமானம் குறைவாக உள்ளோருக்கு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
KCGC உறுப்பினர்களான M.M.அஹ்மது, பல்லாக் சுலைமான், நெட்காம் புஹாரி, அட்வகேட் ஹசன் பைசல், ஹசன் நெய்னா, கிதுரு முஹைதீன், சொளுக்கு முஹம்மது நூஹ்
மற்றும் எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம் ஆகியோர் இம்முகாமிற்கான  அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

இம்மருத்துவ முகாமில் மிகவும் சிறப்பான முறையில் சிகிச்சையளித்த பில்ராத் மற்றும் சங்கரனேத்ராலயா மருத்துவமனை அங்கத்தினர்கள், பல் பரிசோதனையளித்த மருத்துவர் மேலும் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற இடமளித்த மியாசி மேனிலைப்பள்ளி நிர்வாகத்தார் மற்றும் பொருளுதவி செய்த அனைவருக்கும் கேசிஜிசி நிர்வாகத்தார் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
மாண்பாளனாகிய அல்லாஹ் நோய் நொடியில்லா சமூகம் உருவாகவும் ஆரோக்கிய வாழ்வைப் பற்றிய சரியான புரிதலுடன் சீரான வாழ்வு வாழவும் நம்மனைவருக்கும் உதவி செய்தருள்வானாக, ஆமீன்.

தகவல்: கேசிஜிசி சார்பாக,

எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம்.
4 Oct 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top