ads

  • Welcome to Kayal Today


கருணையை ஈந்த கருணாலயா சிறப்புக்குழந்தைகளுடன் நகர்நல மன்ற குழுவினர்கள் சந்திப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
 
காயல்பட்டினத்தில் பல்வேறு சேவைகளை செய்துவரும் நகர்நல மன்ற வாட்ஸ்அப் குழுவினர்கள் கடந்த 25/09/2017 திங்கள் கிழமை காலை 11:45 மணியளவில் வீரபாண்டியபட்டணத்தில் அமைந்துள்ள கருணாலயா சென்று சிறப்புக்குழந்தைகளை சந்தித்தனர். அக்குழந்தைகள் வரவேற்ற காட்சிகள் கல்மனதையும் கலங்க வைப்பதாக அமைந்தது.
 
கருணாலயாவின் பொறுப்பாளர்கள் ஏற்கனவே நகர்நல மன்ற குழுவினரிடம் வைத்த வேண்டுகோளின்படி 35 குழந்தைகளுக்குரிய சோப்பு, எண்ணை,  பேஸ்ட் மற்றும் பிரஸ் ஆகியவைகள் குழுமத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

அத்துடன் அனைத்து குழந்தைகளுக்கும்   மதிய உணவு வழங்கப்பட்டது.
   
இந்த மதிய உணவை  குழுமம் சார்பாக வழங்குவதற்கான முழு பொறுப்பையும்  சென்னை ஜாஸ் வாசனைதிரவியம் நிறுவனத்தினர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

கருணாலயா சிறப்புக்குழந்தைகளுடடான சந்திப்பின்போது, சகோ NT இஸ்ஹாக் லெப்பை, சகோ ASL சதக்கத்துல்லாஹ், சகோ SS  மக்கா செய்யிது இப்ராஹீம், சகோ SAK அபுபக்கர் சித்தீக், சகோ சேக், சகோ அஹ்மது நெய்னா (PT) மற்றும் நகர்நல மன்றத்தின் அட்மின்களும் உடனிருந்தனர்.

நகர் நல மன்றத்தினரை பார்த்தவுடன் சிறப்புக்குழந்தைகளின் மனதில் ஏற்பட்ட சந்தோசத்தையும்,
அவர்களை பிரிந்து வரும்போது கையெடுத்து கும்பிட்டு, கரவொலி எழுப்பி நம்மை  வழியனுப்பிய நிகழ்வு சென்றிருந்த அனைவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

நகர் நல மன்ற குழுமத்தினரின் ஓர் அன்பான  வேண்டுகோள்...

கருணாலயாவில் ஏற்கனவே இருந்த பழைய  மின் மோட்டார் பழுதடைந்து தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.
அதனால் கருணை உள்ளம் கொண்ட  நம் சகோதர்கள் புதிய மின்மோட்டார் வாங்க உதவி செய்ய விரும்புபவர்கள் சகோ MAK. ஜெய்னுல் ஆப்தீன் (+919842365912) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார்கள்.
26 Sep 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top