ads



வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி 11ஆவது மாணவப் பேரவையின் நிறைவு விழா

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 10.04.2017 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் மாணவப்பேரவையின் நிறைவு விழா மூன்றாமாண்டு வணிகநிர்வாகவியல் மாணவி மைமூன் ஆமினா கிராத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. எம்கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு  S. செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையில் கல்லூரிச் செயலர் ஹாஜி W.M.M. மொகுதஸீம் B.A., (CS), கல்லூரி துணைச் செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி. மெர்சி ஹென்றி M.A., Ph.D. முதல்வர் முனைவர் ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. ஆகியோர் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மாணவப்பேரவையின் செயலரும் மூன்றாமாண்டு தகவல் தொழில்நுட்பவியல் மாணவி S. சகாய சுவீட்லின் வரவேற்புரை வழங்கினார். மாணவப்பேரவையின் அறிக்கையை மாணவப்பேரவை தலைவியும் மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி M.A. இப்ராஹிமா சில்மியா வாசித்தார். இதனைத் தொடர்ந்து பல்துறை மற்றும் பல மையங்களின் ஆண்டறிக்கைகள் வாசிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D.  தலைமையுரை ஆற்றினார்.

இவ்விழாவில் கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் தனது நிறைவு விழா உறையில் நமது கல்லூரி குறைந்தகாலத்தில் பெரியளவில் வளர்ச்சி பெற்றதற்கு நிர்வாகமும், தகுதியான பேராசிரியைகளும், ஆற்றல் மிகுந்த மாணவியரும் காரணம் என்று கூறியதோடு, மாணவியர் நேர்மறை சிந்தனையோடும் கடின உழைப்போடும் செயல்பட்டால் சாதனையாளராகலாம் என்றும் சிறப்புரை வழங்கினார். இந்த ஆண்டு மன்றங்களின் சார்பாக நடத்தப்பட்ட அனைத்துப் போட்டிக்கான பரிசினை மாணவியருக்கு கல்லூரி நிறுவனர், செயலர், துணைச்செயலர், இயக்குநர், முதல்வர் வழங்கினர். மாணவப்பேரவையின் துணைத்தலைவி இரண்டாமாண்டு ஆங்கில இலக்கியமாணவி S.M.A. மொஹமது பாத்திமா நன்றி கூற மூன்றாமாண்டு கணிப்பொறியியல் மாணவி பீவிபாத்திமா துஆ ஓத நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.

Thanks and regards,

Wavoo Wajeeha Women's College
           of Arts and Science
Tiruchendur Road, Kayalpatnam -628204

Tel: 04639- 280 900
18 Apr 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top