காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தின் உள்விளையாட்டு அரங்கில் வருகின்ற 25, 26 மற்றும் 27-ம் தேதிகளில் நகர அளவிலான இறகுப் பந்து போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் 16 அணிகள் பங்குபெற உள்ளதாகவும், இந் அணிகள் தலா 8 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
வெற்றி பெறும் அணியினருக்கு சுழற்கோப்பையும், 3500 மதிப்பில் LFC-ல் சாப்பிடுவதற்கான பரிசு கூப்பனும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2500, மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 1500-க்கான LFC பரிசு கூப்பனும் வழங்கப்பட உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தினமும் காலை 7 மணி முதல், 9 மணி வரையும், இரவு 8:30 மணி முதல் 10 மணி வரையும் காயல் ஸ்போர்டிங் கிளப்பின் உள்விளையாட்டு அரங்கில் இருக்கும் பொறுப்பாளர்களிடம் ரூ.350 (ஒரு அணிக்கு) செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
வாசகர்கள் கருத்து