ads



நகரில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 7.5 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்! அபராதமும் விதிக்கப்பட்டது!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பை உபயோகத்தை முழுவதும் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின் அடிப்படையில் தற்போது வாரம் இருமுறை திடீர் ஆய்வுகள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு. பொன்வேல்ராஜ் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இம்மாதம் 14-ம் தேதி நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 24 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 24-ம் தேதி நடத்தப்பட்ட 23 கடைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 7.5 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூபாய் 1350 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற அதிரடி சோதனைகள் இனி வாரம் இரண்டுமுறை நடத்தப்படும் என்றும், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கடை உரிமையாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் ஓத்துழைப்பு நல்க வேண்டுமாய் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் திரு. பொன்வேல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 Sep 2014

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top