ads



வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் ஓசோன் தினம் மற்றும் கணிப்பொறியியல் மன்றக் கூட்டம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

wwwc.JPG
ஓசோன் தினம் :

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 16.09.2014 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நாட்டு நலப்பணித்திட்டத்தின் (எண்-187) சார்பாக ஓசோன் நாள் கொண்டாடப்பட்டது.

இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் 72 பேர் மிவும் ஆர்வத்தோடு கலந்துக் கொண்டு கல்லூரியையும் அதன் சுற்றுப்புறத்தையூம் சுத்தப்படுத்தினர்.

அதுமட்டுமல்லாமல் கல்லூரியிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஓசோன் பற்றிய வாசகங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. சசிகலா M.A., M.Phil., Ph.D., அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தையூம் நாட்டு நலப்பணித்திட்டத்தின் பலன்களையூம் குறித்து ஆலோசனை வழங்கினார்.

இவர்களுடன் நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர்கள் D. பிரவினா பிளஸி புளோரிடா M.A., M.Phil., மற்றும் பிஸி. ஜா. ஜாபியா M.A., ஆ.Phil., அவர்களும் உடற்கல்வி ஆசிரியர் R. அனிஷ்டா B.A., M.PEd., M.Phil., அவர்களும் கலந்துக் கொண்டனர்.

கணிப்பொறியியல் மன்றக் கூட்டம் :
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை சார்பாக (APEX MEETING) 15.09.2014 அன்று காலை 11 மணி அளவில் மன்றகூட்டம் நடைபெற்றது.

மூன்றாமாண்டு மாணவி J.S. ஜஹ்ரா ஃபாயிகா கிராத் ஓதினார். மூன்றாமாண்டு மாணவி தி. அதிஷ்டலெட்சுமி வரவேற்புரை வழங்கினார்.

திருமதி R. அருணா ஜோதி M.A., M.Phil., தமிழ்த்துறை தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கினார்கள்.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் CSI பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப துறைத் துணைப்பேராசிரியர் திரு. S.P. ராஜ சூசைமாியான் பீட்டர்ராஜ் B.Tech(IT)., ME(CSI)., M.BA(IBM)., MCA., M.Sc.,(Electonics and communication)., M.A.(Eng)., M.Sc(Bio-informatics)., M.I.S.T.E., Ph.D., (CSE)*.,  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “கணினி தொழில்நுட்பத்தின் தற்காலப் போக்குகள்” என்ற தலைப்பில் பேசினார்.

மூன்றாமாண்டு மாணவி M.S. ஜாஷீரா நன்றியுரை வழங்கினார். மன்றக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கணிப்பொறியியல் துறை விரிவுரையாளர் M.A. ஹமீது தமினா பீவி B.E., செய்திருந்தார்.

விழாவின் இறுதியாக மூன்றாமாண்டு மாணவி Z.M. ஜீமானா பீவி ஃபாத்திமா துஆ ஓதினார். இவ்விழாவில் கணிப்பொறியியல் துறையைச் சார்ந்த பேராசிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
26 Sep 2014

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top