ads



UFL ஜூனியர்ஸ் 2012 கோப்பையை Speed Strikers அணி தட்டிச் சென்றது.

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
UFL1.jpg
பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிவுற்று விடுமுறை விடப்பட்டதை அடுத்து கடந்த 4 நாட்களாக காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூனியர்ஸ் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நடைபெற்று வந்தன.
UFL2.jpg
இந்த போட்டியில் Gallery Birds, Speed Strikers, Hardy Boys, K.P. Hard Rockers ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன. முதல் சுற்று லீக் முறையில் நடத்தப்பட்டது. இதில் அதிக புள்ளிகளை பெற்ற முதல் இரண்டு அணிகளான K.P. Hard Rockers மற்றும் Speed Strikers அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
GalleryBirds.jpg
நேற்று (01/10) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் சுறுசுறுப்புடன் விளையாடியது. இதில் Speed Strikers அணி இரண்டு கோல்களை அடித்தது. பின்னர் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய K.P. Hard Rockers அணி நல்ல முறையில் இரண்டு கோல்களை அடித்து போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.
HardyBoys.jpg
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சமநிலை முறிவு முறையில் Speed Strikers அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று UFL ஜூனியர் 2012 சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
KpHardRockers.jpg
speed strikers.jpg
இப்போட்டியின் வீடியோ தொகுப்பு விரைவில் வெளியிடப்படும்.
2 Oct 2012

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top