adsரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 31வது செயற்குழு கூட்டம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.

ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 31வது செயற்க்குழு கூட்டம் செப்டம்பர் 21-09-2012 வெள்ளிக்கிழமை பிற்பகல், சகோ. தாவுத் இத்ரீஸ் அவர்களின் இல்லத்தில் வைத்து இனிதே நடபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
photo_3.JPG
ஜும்ஆவிற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட செயற்குழு வழமைப் போல் விருந்து உபசரிப்புடன் ஆரம்பமாயின.
photo 2.JPG
விருந்திற்கு பிறகு துவக்கமாக ஹாபிழ் பி.எஸ்.ஜே. ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் கிராஅத் ஓத கூட்ட நிகழ்வுகள் 2 மணியளவில் ஆரம்பமாயின.

கூட்டத்திற்கு எமது மன்றத்தின் ஆடிட்டர் ஜனாப் பி.எம்.எஸ். முஹம்மது லெப்பை அவர்கள் தலைமை வகித்தார்கள்.
photo 1.JPG
அதனைத் தொடர்ந்து எமது மன்றத்திற்கு வந்திருக்கும் வேண்டுகோள் கடிதங்கள் வாசிக்கப்பட்டு நிதிகள் ஒதுக்கப்பட்டது. 
photo 5.JPG
சென்ற ரமழானில் நடைபெற்ற பொதுக்குழுவிற்கும் இந்த செயற்குழுவிற்கும் இடையே வழங்கப்பட்ட நிதி மொத்தம் 2,40,400 ரூபாய். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- மருத்துவம் -           1,47,400
- கல்வி -                 60,000
- சிறு தொழில்-            8,000
- பிற உதவிகள்-          25,000

குறிப்பு - மன்றத்திற்கு உதவிகேட்டு வரக்கூடிய அவசர தேவை கடிதங்களை அடுத்த கூட்டம் வரை தாமதிக்காமல் மென்நகல் (Scan) எடுத்து அவ்வப்போது செயற்குழு உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வேண்டிய அனுசரனைகள் மற்றும் ஒப்புதல்கள் பெறப்படுகிறது.

இந்த செயற்குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கேலி செய்து திரைப்படம் எடுத்தவர், அதற்கு ஒத்துழைத்தவர்கள், அப்படி எடுத்ததை தனிநபர்களின் கருத்துரிமை என்று  கூறி அவர்களைக் கண்டிக்காத அமெரிக்க அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றை இந்த மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது.

* ஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர், மரியாதைக்குரிய ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) அங்கத்தினர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இரங்கலைத் தெரிவிக்கப்பட்டது.  
அல்லாஹ் அவர்களின் மண்ணறையையும் மறுமைவாழ்வையும் பிரகாசமாக்கி வைப்பானாக. ஆமீன்.

* தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் (LIFETIME ACHIEVEMENT AWARD) விருதினை பெற்ற பிரபல குழந்தைகள் மருத்துவர்,மரியாதைக்குரிய Dr.முஹம்மது தம்பி MD(Pead),DCH அவர்களுக்கு எமது வாழ்த்தினை தெரிவிக்கப்பட்டது.

* புதிதாக நமது ஊரில் உருவாக இருக்கும் ஸிஃபா (SHIFA) என்ற ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பிற்கு எங்கள் மன்றத்தின் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
photo 4.JPG
photo 7.JPG
photo 6.JPG 
இறுதியாக துஆ உடன் கூட்டம் சிறப்புர மாலை 4 மணியளவில் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

தகவல்
தாவுத் இத்ரீஸ்
துணைத் தலைவர் 
ரியாத் காயல் நற்பணி மன்றம்
சவுதி அரேபியா

2 Oct 2012

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
MOHIDEEN ABDUL KADER Says:
Oct 2 2012 12:07PM (IST)

அஸ்ஸலாமு அழைக்கும்
மாஷா அலாஹ் இவ்வளவு பெரிய தொகையில் காயலுக்கு உதவும் இம்மன்றைத்தை பாராட்டுவதுடன் மென்மேலும் பல உதவிகள் செய்ய அல்லாஹ்விடம் பிராத்தித்தவனாக....அடியேனின் ஓர் சிறிய கருத்து!

தங்கள் விருந்துகளில் மெக்கா கோலா என்றால் [உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லாவிட்டால்] OK ! ஆனால் படத்தில் பார்ப்பது USA இன் கோகோ கோலோ என்றால் அதை தவிர்ப்பது மிக அவசியம்!

வஸ்ஸலாம்.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top