adsபுற்றுநோய் குறித்த விளக்கங்களை டாக்டர் சாந்தா தெளிவுபடுத்தினார்.

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

 

KMT1.jpg
சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவரும், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் அவர்களின் பேத்தியும், நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரர் அவர்களின் மருமகளும் பத்மஸ்ரீ, பத்மபூசன் ஆகிய விருதுகளை பெற்றவருமான டாக்டர் சாந்தா அவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நமதூர் கே.எம்.டி மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி நடைபெற்றது இதில் பெரும்பாளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கே.எம்.டி மருத்துவமனையின் செயலாளர் டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சென்னை எல்.கே.எஸ்.கோல்டுஹவுஸ் உரிமையாளர்களில் ஒருவரான எஸ்.செய்யது அஹமது, அடையாறு புற்றுநோய் மையத்தின் ரேடியேஷன் துறை தலைவர் டாக்டர் செல்வலெட்சுமி, எபிடமொலஜி துறை தலைவர் டாக்டர் சுவாமிநாதன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
KMT2.jpg
டாக்டர் சாந்தா பேசியதாவது :

 

அந்த காலத்தில் ஒருவர் புற்றுநோய் வந்து இறந்துவிட்டால் அதனை கருமவியாதி எனக் கூறினார்கள். இதை குணப்படுத்தவே முடியாது என்றனர். ஆனால் இப்போது விஞ்ஞான வளர்ச்சியில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. புற்றுநோய் குணப்படுத்த கூடிய நோயாக மாறியுள்ளது. அதாவது மூன்றில் இரு பங்கு குணப்படுத்த கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே குணப்படுத்த முடிகிறது. இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லை. புற்றுநோய் வந்தால் இனி அவ்வளவுதான் என முடிவு செய்துவிட்டு வெளியே சொல்ல பயப்படுகின்றனர். மேலும் நோய் இருப்பதை மறைந்து விடுகின்றனர். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்த கூடிய வாயப்பு உள்ளது. புற்றுநோய் நோயே இல்லை.

ஒவ்வொரு புற்றுநோயும் ஒவ்வொறு மாதிரியாக உள்ளது. நமது உடம்பில் ஒவ்வொரு காரணத்தினால் இந்நோய் உண்டாகிறது. இதனை முதலிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும். புகையிலையினால் ஏற்படும் புற்றுநோய் ஆண்களுக்கு 40 சதவீதம் ஏற்படுகிறது. புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடிக்க 7 விதமான அடையாளங்கள் உள்ளன.

* உடலில் தசை பிடிப்பு பகுதியில் கட்டிகள் அதிகமாவது.

* உடலில் கண், வாய், மூக்கு உள்ளிட்ட 7 துவார பகுதி உள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் ரத்தமோ, தூர்நாற்ற கசிவு ஏற்பட்டாலோ.

* தொடர்ந்து அஜீரண கோளாறு.

* மருத்துவ சிகிச்சை பெற்றும் தொடர்ந்து இருமல், தொண்டையில் கரகரப்பு இருந்தல்.

* மச்சம், மறு ஆகியவற்றில் பெரிதாகி கசிவு ஏற்பட்டால் உடனடியாக உரிய டாக்டரிடம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

* மொபைல் போனை அதிகமாக பயன்படுத்த கூடாது.

* முற்றிலும் குணப்படுத்தபடுப்பட்ட மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கு 85 சதவீதம் வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.  இலங்கை காயல் நலமன்றத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐ.புகாரி நன்றி கூறினார்கள். இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஏ.தர்வேஷ் முஹம்மது அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

நிகழ்சிக்கான ஏற்பாடுகளை கத்தார் காயல் நலமன்றம், ஹாங்காங் காயல் ஐக்கிய பேரவை, ரியாத் காயல் நற்பணி மன்றம், கேஎம்டி மருத்துவமனை, தி காயல் பர்ஸ்ட் டிரஸ்ட், காயல் வெல்பர் டிரஸ்ட் ஆகியவை இணைந்து செய்திருந்தன.

புகைப்படங்கள் :
ஏ.ஹைச்.சதக்கதுல்லாஹ்,
யாஃபியா மைபைல்ஸ்,
மெயின் ரோடு.

3 Oct 2011

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
ALS MAAMA Says:
Oct 3 2011 8:39PM (IST)

பத்மஸ்ரீ டாக்டர். v . சாந்தா அவர்களை அழைத்து K.M.T மருத்துவமனை நேரடி நோய் குறித்து விளக்கம் தர செய்தது, ஆடவர் மகளிர் கேள்விகளுக்கு நேரடி பதில் அளித்தமைக்கு நன்றி. இன்ஷா அல்லாஹ் ALLERGY, ASTHMA SPECIALIST டாக்டர். பஷீர் அஹமத் அவர்களை சென்னையில் இருந்து அழைத்து வந்து இது போல் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

ALS, (எழுத்தாளர், பொது சேவை).

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top