adsநகர்மன்றத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது? “மெகா” அறிக்கை!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்...


அன்பிற்கினிய காயல் சொந்தங்களே அஸ்ஸலாமு அலைக்கும்!

கட்சி சின்னங்களில் போட்டியிடும் அரசியல்வாதிகளை ஆதரிப்பது இல்லையென்றும், வார்டு உறுப்பினர்கள் அந்த வார்டுக்கு உட்பட்ட ஜமாஅத்களால் ஒருங்கிணைந்து தேர்வு செய்யப்பட வேண்டுமென்றும், நகர்மன்றத் தலைமை பொறுப்பை, நகர மக்கள் ஜனநாயக ரீதியாக சிந்தித்து, தங்களுக்கு ஏற்ற தலைமையை தாங்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முக்கிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதுதான் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - மெகா (MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA).

காயல்பட்டினம் நகர்மன்றத்தைப் பொருத்த வரை, இதுவரை புறநகர் வார்டுகளில் ஒரு சிலரைத் தவிர வேறெங்கும், எந்த அரசியல் கட்சிகளும், இந்தத் தேர்தலில் போட்டியிடாததை MEGA மகிழ்வோடு வரவேற்கிறது. வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஜமாஅத்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதற்கான MEGAவின் முயற்சி, பூரணமாக வெற்றியடையவில்லை என்றாலும், ஆங்காங்கே ஜமாஅத்களால் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை, MEGA வாழ்த்தி மகிழ்கிறது.

நகர்மன்றத் தலைமையைப் பொருத்த வரை, MEGA ஏற்கனவே அறிவித்த நிலைப்பாட்டை அல்லாஹ்வை முன்னிறுத்தி நகர மக்களிடம் மீண்டும் உறுதி செய்கிறது.  அதனடிப்படையில், களத்தில் இருப்பவர்களில் வெற்றிபெறும் அளவிற்கு தகுதியுள்ள போட்டியாளர்களாக சகோதரி மைமூனத்துள் மிஸ்ரியா மற்றும் சகோதரி ஆபிதா ஷேக் ஆகியோர் இருப்பதாக MEGA கருதுகிறது.

ஆகவே, இவர்கள் இருவரின் மார்க்கப்பற்று, கல்வித்தகுதி, நிர்வாகத்திறன், பொதுவாழ்வின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவம், சமூக நலப் பணிகளில் முன் அனுபவம் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற பல்வேறு காரணிகளை, மக்களே அலசி ஆராய்ந்து, ஜனநாயக ரீதியில் முழு சுதந்திர உணர்வுடன் தங்களது தலைவரைத் தேர்ந்தெடுக்க, நகர மக்கள் அனைவரையும் MEGA அன்போடு வேண்டுகிறது.

தகவல் :
கவிமகன் காதர்,
செய்தித் தொடர்பாளர்,
MEGA.

3 Oct 2011

வாசகர்கள் கருத்து

3 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
Sahuban Ali Says:
Oct 4 2011 3:44PM (IST)

அன்புள்ளம் கொண்ட கயலர்களே, நீங்கள் எல்லோரும் வேண்டுகோள் விடுக்கும் படி MEGA மட்டும் ஒரு வேட்பாளரை அடையாளம் காட்டி இருந்தால், அவர்களுக்கும் அயிக்கியத்தை அடகு வைத்த அயிக்கிய பேரவைக்கும் எந்த வித வித்தியாசங்களும் இல்லாமல் போய் இருக்குமே. ஆயிரக்கணக்கில் வசிக்கும் ஒரு நகரின் மாநகராட்சி தலைவரை ஒரு சில தனி நபர்கள் தேர்ந்து எடுப்பதை ஆரம்பமுதலே கண்டித்து வரும் ஒரு இயக்கம்தான் MEGA . இப்போதும் அதே நிலைப்பாட்டை உருதிப்படுவதாகத்தான் இருக்கிறது MEGA வின் இந்த அறிக்கை. MEGA எனபது ஒரு வழிகாட்டுதல் அமைப்பே தவிர உங்களுக்காக ஒருவரை தேர்வு செய்ய அவர்களுக்கு இந்த ஜனநாயக அமைப்பில் எந்த உரிமையும் இல்லை என்பதை நன்கு உணர்ந்த உத்தமர்கள் தான் MEGA வை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு உள்ள கவலை எல்லாம் MEGA போன்ற ஒரு சூப்பர் ஆன அமைப்பு இந்த தேர்தலுக்கு பிறகு இல்லாமல் போய் விடக்கூடாதே. இதே இயக்கம் ஊரின் நலனிற்காகவும் பாடு பட வேண்டும். சாளை சலீம் கக்கா, சோல்ஜெர் பாழுள் கரீம் காக்கா அவர்களுக்கு எங்களின் தாழ்மையான வேண்டுகோள். நீங்கள் இருவரும் CFFC ஐ ஆரம்பித்து செய்த செய்துகொண்டிருக்க்ம் சாதனைகள் கணக்கில் அடங்காது. அதே போலே ஊர் ஆயிக்கியத்திர்க்காகவும் ஒரு அமைப்பை ஜனநாயக முறையில் ஆரம்பித்து ஊர் ஒற்றுமைக்காக வேண்டி பாடுபடுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அணித்து பணிகளும் சிறக்கவும் ஊர் ஒற்றுமையாக திகழவும் அருள் பாலிப்பானாகவும். ஆமீன்.

sulaiman Says:
Oct 4 2011 12:08PM (IST)

மெகா வின் இந்த அறிக்கை "பாம்பும் சாக வேண்டும் அதே சமயம் கம்பும் உடைய கூடாது" என்பதை நமக்கு நினையு படுத்துகிறது. இதை நமக்கு சொல்ல " மெகா" போன்ற அமைப்புகள் தேவை தானா? நமக்கு இது கூட தெரியாதா?

KALEEL SHIFA MEDICAL CENTER Says:
Oct 4 2011 4:05AM (IST)

இத சொல்லு ராதுக இத்தன ஆர்ப்பாட்டம் .மெகா ஒரு ஆளா கை காட்டடும் இல்லை சும்மா இருக்கட்டும் மொத்ததுல பதவி நம்ம லுக்கு இல்லை யன்ன்பது உண்மை

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top