காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12ஆவது பட்டமளிப்பு விழா 21.03.2022 திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யிது அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மூன்றாமாண்டு கணிதவியல் மாணவி Z.A. ஜெய்னம்பு கிராத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.

மாணவியருக்குப் பட்டமளித்து சிறப்புரை வழங்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவருமான ஜனாப் M. அப்துல் ரஹ்மான் M.A., Ex.MP, வருகை தந்திருந்தார். கல்லூரி முதல்வர் முனைவர் R.C. வாசுகி M.A., Ph.D., DGT, வரவேற்புரை வழங்கினார். கல்லூரி துணைச்செயலர் ஹாஜி ஹாபீஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) வாழ்த்துரை வழங்கினார்.
2017-2020 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலைப் பிரிவில் (UG) 419 மாணவியரும் 2018-2020 (PG) 30 மாணவியரும் ஆக 449 பட்டதாரிகள் பட்டம் பெறும் தகுதி பெற்றிருந்தனர்.
இளங்கலைப்பிரிவில் 39 தமிழ் இலக்கிய (Tamil Literature) மாணவியரும், 58 ஆங்கில இலக்கிய (English Literature) மாணவியரும், 27 பொருளியல் (Economics) மாணவியரும், 49 வணிகச் செயலாற்றியல் (BBA) மாணவியரும், 52 வணிகவியல் (B.Com) மாணவியரும், 42 கணிதவியல் (Mathematics) மாணவியரும், 39 கணினி அறிவியல் (Computer Science) மாணவியரும், 44 தகவல் தொழில்நுட்பவியல் (Information Technology) மாணவியரும், 38 இயற்பியல் துறை (Physics) மாணவியரும் பட்டம் பெற்றனர்.

முதுகலைப் பட்டத்தை முதுகலை ஆங்கில இலக்கிய (M.A English Literature) மாணவியர் 12 பேரும், முதுகலை வணிகவியல் (M.Com) மாணவியர் 10 பேரும், முதுகலை கணிதவியல் (M.Sc Mathematics) மாணவியர் 3 பேரும் பெற்றனர்.
மேலும் பல்கலைக்கழகத் தரவரிசையில் 32 மாணவியர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். பகுதி I அரபி பாடத்தில் 9 பேரும், பகுதி II ஆங்கிலத்தில் 1 மாணவியும், வணிக செயலாற்றியல் துறையில் 5 மாணவியரும், வணிகவியல் துறையில் 1 மாணவியும், கணிதவியல் துறையில் 3 மாணவியரும், கணினி அறிவியல் துறையில் 5 மாணவியரும், தகவல் தொழில்நுட்பவியல் துறையில் 4 மாணவியரும், பொருளியல் துறையில் 3 மாணவியரும் சிறப்பிடம் பெற்றனர்.
சிறப்பு விருந்தினர் மாணவியர் நேர்மை, தன்னம்பிக்கை, நேர்மையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு பெண் கல்வி கற்றால் அச்சமுதாயமே சிறப்பிடம் பெறும் என்றும் சிறப்புரை வழங்கி 409 மாணவியருக்கும் பட்டமளித்து அனைவரையும் பாராட்டினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் R.C. வாசுகி M.A., Ph.D., DGT வழிகாட்ட பட்டம் பெற்ற மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லூரிச் செயலர் ஹாஜி வாவு M.M. மொகுதஸீம் B.A., (CS) நன்றியுரை நல்கினார்.
கல்லூரி இயக்குநர் முனைவர் மெர்சி ஹென்றி M.A., Ph.D., மாணவியரின் பெற்றோர், கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவியரை வாழ்த்தினர்.
நிறைவாக, இரண்டாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி M.L. செய்யது துஹைனா துஆ ஓத, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
வாசகர்கள் கருத்து