adsமலபார் காயல் நல மன்றத்திற்கு (மக்வா) புதிய நிர்வாகிகள் தேர்வு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
மலபார் காயல் நல மன்றத்திற்கு (மக்வா) புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்வு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் S.பாதுல் அஸ்ஹாப் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியாவது...
MAKWA.jpg
மன்றத்தின் ஐந்தாம் பருவ செயற்குழுவை தேர்வு செய்யும் ஜனநாயக முறையிலான தேர்தல் மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

நாள் :~ 13.03.2022   -  இடம்:~ கோட்டபரம்பா  : நெய்னா காக்கா வீட்டு மாடியில்

நான்கு பருவங்களை நிறைவு செய்த மலபார் காயல் நல மன்றம் (மக்வா) தொடங்கப்பட்டு 12 வருடங்கள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஐந்தாம் பருவ செயற்குழுவிற்கு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

தேர்தல் :

முன்னரே அறிவித்தபடி காலை சரியாக 10 மணிக்கு வாக்குப்பதிவு நிகழ்வு தொடங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூர் மன்ற  உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
கோழிக்கோடு நகரம் மட்டுமின்றி சற்று தொலைவில் இருந்தாலும் சிரமம் பாராமல் வடகரா , தலச்சேரி , கண்ணூர் , பய்யணுர் போன்ற பகுதிகளில் இருந்தும் உறுப்பினர்கள் வருகை தந்து வாக்குகளை பதிவு செய்தனர்.

ஆரம்பம் முதலே வாக்குப்பதிவு சற்றும் தொய்வின்றி விறுவிறுப்புடன் இறுதி வரை நடந்தது.
வர இயலாத சூழ்நிலையில் தபால் ஓட்டு வழியாகவும் வாக்கு செழுத்த அனுமதிக்கப்பட்டதையடுத்து நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தபால் மற்றும் வாட்ஸ்அப் வழியே தங்களின் வாக்குகளை பதிந்து ஆர்வத்தை காட்டினர்.

வழக்கம் போல்  வாக்குச்சீட்டு முறையே இம்முறையும் நடைமுறைப்படுத்தபட்டது. ஏற்கனவே அறிவித்தபடி பகல் 1 மணிக்கு வாக்குபதிவு முடிவடைந்ததை தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
வாக்குபதிவு முடிவில் 111 வாக்குகள் பதிவாகி 82.5 % வாக்குகள் பதிவானதாகவும் தெரிவித்தனர்.

தேர்தல் அதிகாரிகள் :

1, S.L சாகுல் ஹமீது ( Ameen tools)

2, முஹம்மது உசைன் (Safa compliments)

3, U.L செய்யது அஹமது (JB tools)

ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக மிக சிறப்பாகவும் அமைதியாகவும் தேர்தலை நடத்தி தந்தனர்.

வாக்கு எண்ணும் பணி :

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அறிவித்த அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியை துவங்கினர்.
முடிவுகள் மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்பதையும் உறுதிபடுத்தினர்.

மதிய உணவு ஏற்பாடு :

வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவாக சுவைமிகுந்த காயல் களரி கரி மணம் வீச தயார் செய்யப்பட்டு பரிமாறப்பட்டது. அதில் பார்சல் ஏற்பாடும் செய்யப்பட்டதையடுத்து பலரும் முன்பதிவு செய்து தங்கள் வீடுகளுக்கு வாங்கி சென்றனர்.

உணவு ஏற்பாட்டின் பொருளாதார தேவையை நம் மன்ற‌ உறுப்பினர்களின் வாட்ஸ்அப் தளத்திலே கணக்கிட்டு வசூலிக்கப்பட்டது. உணவு ஏற்பாட்டின் பொறுப்பை  T.S சாஹிப் தம்பி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

எங்கே சென்று இது போல் மகிழ்ச்சியான தருணங்களை பெறுவது, எங்கு சென்றாலும் கிடைக்காது 
என்பதை ஒவ்வொரு உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் சந்தித்து மகிழ்ந்ததை காணும் போது இது மன்ற நிகழ்ச்சி என்பதை தாண்டி நம் வீட்டின் கல்யாண விருந்து போலவே காட்சி தந்தது.

பொதுக்குழு கூட்டம் :

தேர்தல்‌ முடிவுகள் அறிவிப்பு :

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவடைந்ததை தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததை தொடர்ந்து 
மாலை சரியாக 4.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

தொகுப்பாளர் :

நிகழ்ச்சிகளை மன்ற உறுப்பினர் S.N மீரான் தொகுத்து வழங்கினார்.

கிராத் :

மன்ற செயற்குழு உறுப்பினர்‌ M.G.செய்யது இபுராஹிம் அவர்களுடைய மகனார் S.I.அப்துல் கௌது அவர்கள் அழகிய குரலில் இறைமறை ஓதி துவக்கினார்.

வரவேற்புரை :

செயற்குழு உறுப்பினர் S.A பாதுல் அஸ்ஹாப் அவர்கள் வந்திருந்த அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்று பேசினார்.

கடந்த பருவத்தின் செயல்பாடுகள் :

கடந்த பருவத்தின் செயற்குழுவின் சிறந்த செயல்பாடுகளை விவரித்து மன்றத்தின் முன்னால் தலைவர் 
S.ஷேக் சலாஹுத்தீன் அவர்கள் உரையாற்றினார்.

கணக்கு தாக்கல் :

கடந்த மூன்று ஆண்டுகளாக மன்றத்தின் வரவு செலவுகளை தெளிவாக பொதுக்குழு முன்பில் பொருளாளர் N.மொகுதும்‌‌ மீரா சாஹிப்‌ அவர்கள் சமர்பித்தார். கொரோனா கால கட்டத்திலும் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் நாம் அனைவரும் இருந்த போதும் நம் மன்ற உறுப்பினர்கள் சிறப்பாக மன்றத்திற்கு மாதச்சந்தாவை தந்து பூரண ஒத்துழைப்பு தந்தார்கள் என்று சிலாகித்து பேசினார்.

கணக்கு தணிக்கையாளர் உரை :

மன்றத்தின் பொருளாளர் N.மொகுதும் மீரா சாஹிப் அவர்களுடைய கணக்கு சரிபார்ப்புகளை கணக்கு தணிக்கையாளரான K.M.முத்து முஹம்மது ரஃபீக்  (KRS) அவர்கள் பொருளாளர் மிக சிறப்பாக பணியாற்றினார் கணக்குகள்‌ மிக சரியாக உள்ளதாகவும் வாழ்த்தி பேசினார்.

வாக்கு எண்ணிக்கை நடை பெற்ற விளக்கம் :

தேர்தல் அதிகாரி முஹம்மது உசைன் அவர்கள் வாக்குகள் எண்ணப்பட்ட விளக்கத்தை பொதுக்குழு முன்பு விளக்கமாக எடுத்துரைத்தார். 111வாக்குகளில் ஒன்று மட்டும் செல்லாத வாக்காக பதிவானதையும் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவுகள் :

மக்கள் ஆர்வமுடன் காத்திருந்த தேர்தல் முடிவுகளை S.L சாகுல் ஹமீது அவர்கள் அறிவித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்து கொண்டார்.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் :

M.G.செய்யது இபுராஹிம்
N.M.முஹம்மது இஸ்மாயில்
H.A.அஹமது மதார்
T.S. சாஹிப் தம்பி
M.A.உதுமான் அப்துல் ராஜிக்
K.M.முத்து முஹம்மது ரபீஃக்
S. பாதுல் அஸ்ஹாப்
M.A.K.முஹம்மது உதுமான்
S.N.ரஹ்மத்துல்லா
S.E.மொகுதும் ஆதில்
J.M.முஹம்மது ரயிஸ்
N.மொகுதும் மீரா சாஹிப்
M.முஹம்மது சுலைமான்
M.செல்வ குமார்
A.S.I.முஹம்மது சிராஜ்

செயற்குழுவில் வெளியூர் உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுப்பு :

தலச்சேரி பகுதிகளில் இருந்து ஒருவர் செயற்குழுவில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை பொதுக்குழுவில் பேசப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 15 செயற்குழு உறுப்பினர்களுடன் 16வது நபராக 
தலச்சேரி பகுதியில் இருந்து P.முஹம்மது சலீம் அவர்களை செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிர்வாக குழு தேர்வு :

வெற்றி பெற்ற 15 வேட்பாளர்களும் உடனடியாக தங்களுக்குள் கலந்தாலோசித்து தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுவை பொதுக்குழு முன்னில் அறிவித்தனர்.

தலைவர் : K.M முத்து முஹம்மது ரஃபீக் (KRS)

துணை தலைவர் : S.E மொகுதும்ஆதில்

செயலாளர் : M.A.K முஹம்மது உதுமான்

துணை செயலாளர் : H.A. அஹமது மதார் 

பொருளாளர் : M.A. உதுமான் அப்துல் ராஜிக்

ஆகியோர் கொண்ட நிர்வாக குழுவை பொதுக்குழுவும் வாழ்த்தி துஆ செய்தது.

புதிய பொறுப்பாளர்கள் உரை :

மன்றத்தின் புதிய பொறுப்பாளர்கள் தங்கள் பணியில் சிறப்பாக செயல்பட அனைவரும் துஆ செய்ய வேண்டும், அதேபோல் கடந்த பருவத்தில் நீங்கள் தந்த ஒத்துழைப்பை போல இப்பருவமும் எங்களுக்கு உறுதுணையாகவும் இருக்க வேண்டும் என்று சிறு அறிமுக உரை நிகழ்த்தினர்.

பொறுப்புகள் மாற்றம் :

கடந்த பருவத்தின் தலைவர் S.ஷேக் சலாகுத்தீன் , கடந்த பருவத்தின் செயலாளர் A.S.I.முஹம்மது சிராஜ் ,
கடந்த பருவத்தின் பொருளாளர்  N.மொகுதும்‌ மீரா சாஹிப் , ஆகியோர் தங்கள் பொறுப்புகளை புதிய தலைவர் K.M.முத்து முஹம்மது ரஃபீக் (KRS), புதிய செயலாளர் M.A.Kமுஹம்மது உதுமான், புதிய பொருளாளர் M.Aஉதுமான் அப்துல் ராஜிக் ஆகியோர்களுக்கு  தங்கள் கோப்புகளை மாற்றும் நிகழ்வு பொதுக்குழுவின் முன்னிலையில் நிறைவேறியது.

நன்றியுரை :

இந்த தேர்தலில் அதிகாரியாக பணியாற்றிய ஊண்டி U.L. செய்யது  அஹமது அவர்கள்  நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாக்களித்த அனைவருக்கும்  களரி விருந்து‌ ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் இந்நிகழ்ச்சியினை மிகச்சிறப்பான முறையில் நடத்திட இரண்டு மூன்று நாட்களாக வேலை செய்த அனைவருகளுக்கும் நன்றியை தெரிவித்து கஃபாரா துஆவுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

S.பாதுல் அஸ்ஹாப் 
மக்வா செய்தி தொடர்பாளர்
கோழிக்கோடு

இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Mar 2022

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top