மார்க்க மற்றும் உலக கல்வி என இரு கல்வியையும் ஒருசேர பயிலும் முறையில் சிறப்பாக செயலாற்றி வரும் காயல்பட்டினம் அல் ஜாமிவுல் அஸ்ஹர் மனன கல்வியகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (20/03/2022) நடைபெற்றது.

கடந்த 20 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்டோரை திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழ்களாக உருவாக்கிய காயல்பட்டினம் அல் ஜாமிவுல் அஸ்ஹர் ஹிஃப்ழு பிரிவின் இவ்வாண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் ஏழு ஹாஃபிழ்கள் பட்டங்களை பெற்றார்கள்.

இவ்வருடத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. விண்ணப்ப படிவங்களை மஸ்ஜித் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என மத்ரஸா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் புகைப்படங்கள் :
ஹாஃபிழ் M.M. முஜாஹித் அலி முகநூலில் இருந்து.
வாசகர்கள் கருத்து