ads



இரகுப சார்பில் ஜமாஅத் கவுன்சிலர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
J C 13 03.jpg 
கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றிபெற்றவர்கள் மார்ச் 02ஆம் தேதி பதவி ஏற்றனர். மார்ச் 04ஆம் தேதி தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அன்றைய தினமே பதவி ஏற்றனர்.

இதன் தொடராக வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு அந்தந்தபகுதி மக்கள், ஜமாஅத்துக்கள் பாராட்டு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர்.

அந்த வரிசையில் இரட்டை குளத்துப்பள்ளி ஜமாஅத்தினர்கள் மற்றும் ஜலாலியா சங்க அங்கத்தினர்களின் சார்பாக நகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் 2,5,6 மற்றும் 13வது வார்டு கவுன்சிலர்கள் அனைவருக்கும் வரவேற்பு விழா காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தலைவர் அல்ஹாஜ் M.K. முஹியத்தீன் தம்பி   (துரை காக்கா) தலைமையில் நேற்று (13/03/22) நடைபெற்றது.

துவக்கமாக  இரட்டை குளத்துப்பள்ளியின் இமாம் அவர்களின் இறைமறைவசனத்துடன் கூட்டம் இனிதே ஆரம்பமாகியது. நிகழ்ச்சிகளை சகோ. V.D. சதக்தம்பி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.


ஐக்கியப் பேரவை துணைச்செயலர் அல்ஹாஜ் A.A.C. நவாஸ் , ம.தி.மு.க. தூத்துக்குடி மாவட்டப் பொருளாளர் காயல் S.E. அமானுல்லாஹ், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  வருகைபுரிந்த தமிழக அரசு சிறுபான்மையினர் ஆணையக்குழு உறுப்பினர் ஹாஜி தமீமுல்அன்சாரி (நாகூர்) அவர்கள் உரையாற்றினார்.

அவர்களது உரையில்...

சிறுபான்மையினர்களாகிய குறிப்பாக முஸ்லிம்கள் இந்த ஆணையத்தின் மூலமாக கிடைக்கும் நன்மைகளை விவரித்து கூறியதோடு, இதை மக்களுக்கு பெற்றுத்தர ஐக்கியபேரவை முழு உதவியாக இருக்கும் என்று நம்புவதாகவும்  கூறினார்.

இந்த காயல் மாநகரத்தில் ஜமாத் மூலமாக எந்த அரசியல் கட்சிகளும், கட்சி சார்பாக போட்டியிடாமல் சுயேட்சை வேட்பாளர்களையும் மற்றும் தலைவர், துணைத்தலைவரை இந்த ஐக்கிய பேரவை அமைப்பு வெற்றிபெற வைத்து  மாபெரும் சாதனையை  தமிழகத்து செய்து காட்டி இருக்கிறார்கள். இந்த ஊர் தமிழகத்திற்கே ஒரு முன்மாதிரி ஊராக திகழ்கிறது என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து கவுன்சிலர்களுக்கு சால்வை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜமாஅத் சார்பில் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. தொடர்ந்து நகர்மன்ற தலைவர் அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள்.

இறுதியாக நன்றியுரைக்குப்பின் இரட்டை குளத்துப்பள்ளியின் இமாம் அவர்களின் துஆ-வுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இந்நிகழ்வில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
14 Mar 2022

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top