ads



காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச பெண்கள் தினம்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
WW C 08 03.jpg
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பெண்கள் கழகம் சார்பாக 08.03.2022 மதியம் 3.00 மணியளவில் சர்வதேச பெண்கள் தினத்தை நினைவுகூறும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கல்லூரி நிறுவன தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யிது அப்துர் ரஹ்மான், செயலர் ஹாஜி வாவு M.M. மொகுதஸிம் B.A (CS), மற்றும் கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி மெர்சி ஹென்றி M.A., Ph.D. ஆகியோரின் வழிகாட்டுதலின் படி கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செ.வாசுகி M.A., Ph.D., DGT, மற்றும் துணைச்செயலர், ஹாஜி ஹாபீஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) முன்னிலையில் நடைபெற்றது.

வணிகவியல் துறையைச் சார்ந்த மாணவி M.M. நஃபீசத்துல் மிஸ்ரியா கிராத் ஓத தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. முதல்வர் முனைவர் இரா.செ.வாசுகி M.A., Ph.D., DGT, வரவேற்புரை வழங்கினார். கல்லூரியைச் சேர்ந்த துறைத்தலைவர்கள் அனைவரும் பெண்கள் தினம் தொடர்பாக சொற்பொழிவாற்றினார்.

மேலும் பெண்கள் கழக ஒருங்கிணைப்பாளரும் உதவிப் பேராசிரியருமான ஆங்கிலத் துறையை சார்ந்த செல்வி S. தரணி M.A., NET, நன்றியுரை வழங்கினார். கணிதவியல் துறை மாணவி A.S. முஹ்சினா ஷரீஃபா துஆ ஓத தேசிய கீதத்துடன் இனிதே நிறைவடைந்தது.
14 Mar 2022

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top