ads



வெறிநாய் கடியிலிருந்து காயல் மக்களை காக்கத் தவறினால் காயல் நகராட்சியை முற்றுகையிடுவோம்..! காக்கும் கரங்கள் அறிக்கை!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
வெறிநாய் கடியிலிருந்து காயல் மக்களை காக்கத் தவறினால் காயல் நகராட்சியை முற்றுகையிடுவோம் என காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-
safehand.jpg
நேற்று (08/03/2022) செவ்வாய்க்கிழமை, நம் நகரில் பத்துக்கும் அதிகமானவர்கள் தெரு நாய்களால் கடிபட்டு இருக்கிறார்கள்.

வெறிநாய்களை கட்டுப்படுத்திடவும் மக்களை பாதுகாத்திட வேண்டி நம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் உட்பட நமதூரின் பொது நல அமைப்புகள் சார்பில், கடந்த காலங்களில் நமதூர் நகராட்சிக்கு பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக புளூகிராஸ் பிரச்சனையாக்கும் என தெரிவித்து நாட்களை கடத்தி வந்தனர். 

ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து தற்போது மனிதர்களை கடிக்கும் அளவிற்கு நிலமை மோசமாகி விட்டது.

இனிமேலும் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா? அல்லது மனித உயிர் போகும்வரை வேடிக்கை பார்த்து கொண்டிருக்குமா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இனியும் கால தாமதமில்லாமல் இதற்கு உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவில்லை என்றால்...

காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில், பொதுமக்களைத் திரட்டி, நகராட்சியை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Mar 2022

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top