ads



காக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினம் நகராட்சியின் தலைவர் ஜனாப். கே.ஏ.எஸ். முத்து முஹம்மது அவர்கள் கடந்த 4ஆம் தேதி பதவி ஏற்றார்கள், அன்றையதினம் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் ஜனாப். எம்.ஏ.கே. ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
safehand.jpg
நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கு, இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நின்று நிலவட்டுமாக.

நகர்மன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் அனைவர்களுக்கும் முதலாவதாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோரிக்கை எண் : 1

நமதூரின் பல பகுதிகளில் பல ஆண்டுகளாக புதிய சாலைகள் அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. அதே போல் நகரின் புதிய குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகள் போடப்படாமல் உள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு பாதிப்புள்ளாகி வருகிறார்கள்.

ஆகவே இது விஷயத்தில் தாங்கள் தனி கவனம் செலுத்தி, அரசின் வழிகாட்டுதலின்படி உடனடியாக தரமான தார் சாலைகளை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கோரிக்கை எண் : 2

நமதூரில் புதிய குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உருவாகி இருக்கிறது. அந்த பகுதிகளில் மின் கம்பங்கள் இருந்தும், பல பகுதிகளில் மின்விளக்கு இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவே இது விஷயத்திலும் உடனடியாக கவனம் செலுத்தி, பொதுமக்களின் சிரமத்தை போக்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களின் பணி சிறப்பாக அமைய மீண்டும் வாழ்த்துகிறேன்.

இந்த கோரிக்கைகளையும், தொடர்ந்து நகரின் நலன் சார்ந்த கோரிக்கைகளையும் விரைந்து செயல்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில்...

M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்,
தலைவர் : காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்.

இவ்வாறு அக்கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Mar 2022

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top