ads



2018 ஜனவரி 6 மற்றும் 7-ல் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் மீலாதுநபி விழா!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
rla1.jpg
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இக்கூட்டம் குறித்து அம்மன்றத்தின் சார்பில் சகோ. ஜட்னி S.A.K. செய்யது மீரான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையாவது...

ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் பொதுக்குழு கூட்டம் துல்ஹஜ் பிறை 11 (03/09) அன்று அல்ஹாஜ் M.M. முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஜனாப் Z.A. ஷேக் அப்துல் காதிர் அவர்கள் கிராஅத் ஓதி, வரவேற்புரையாற்றி கூட்டத்ததை துவக்கிவைத்தார். கடந்த (33வது ஆண்டு) ஜனவரி 2017-ல் நடைபெற்ற மீலாது விழாவின் ஆண்டறிக்கையை ஜனாப். T.M.L. செய்யது உமர் அவர்கள் வாசித்தார்கள்.
rla2.jpg
இக்கூட்டத்தில் நமது உயிரினும்மேலானா கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாள் மீலாதுபெருவிழாவை இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஹிஜ்ரி 1439 ரபிவுல் ஆகிர் பிறை 18 & 19 ஜனவரி 6 & 7 (சனி - ஞாயிறு) ஆகிய தேதிகளில் 34ஆவது வருடமாக மிகசிறப்பான முறையில்நடத்திட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
rla3.jpg
ஃபாத்திஹா துஆ மௌலவி அல்ஹாஃபிழ் M.A.K. ருக்னுதீன் ஸாஹிபு ஓதினார்கள், ஸலவாத்துடன் இக்கூட்டம் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Sep 2017

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
சட்னி, எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.ஜித்தா. Says:
Sep 14 2017 1:32PM (IST)

எங்கள் மீலாது பேரியம் சார்ந்த செய்தியை
மிகவும் அருமையான முறையில் தொடர்ந்து
எல்லோரும் அறியும் வண்ணம் அழகிய வகையில் தெரியதந்தமைக்கு மிக்க நன்றி.
ஜஸாக்கல்லாஹ் ஹைரா.ஆமின்.

அன்புடன்.
ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பாக
செய்யது மீரான்.
ஜித்தா.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top