உள்ளாட்சி தேர்தல் பிப்:19ல் நடைபெற்று பிப்:22ல் முடிவுகள் வெளிவந்தன. மார்ச்:02ல் பதவிபிரமானம் எடுத்துக்கொண்ட உறுப்பினர்களால் மார்ச்:04ல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் K.A.S. முத்து முஹம்மது ஆலிம்.

காயல்பட்டினத்திற்கு வரும் குடிநீர் கலங்களாக வருவதாக புகார் வந்ததையடுத்து, உடனடியாக குடிநீரேற்று நிலையம் அமைந்துள்ள பொன்னன்குறிச்சிக்கு 5ஆம் தேதி இரவு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார் தலைவர். அங்குள்ள குடிநீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யவும், பலதினங்களாக பழுதாகி இருந்து மின்மோட்டரை உடனடியாக பழுதை நீக்கவும் அல்லது தேவைபடின் புதிய மின்மோட்டர் வாங்கவும் உத்தரவிட்டார்கள்.

காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் பகுதி வாரியாக பணிகளை மேற்கொள்ள சரியாக பிரித்து அனுப்பப்படுகிறார்களா என்பதனையும், அவர்களின் குறைகளையும் கேட்டறிவதற்காகவும் 07ம் தேதி அதிகாலையிலேயே நகராட்சி அலுவலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று (08/03/2022) நகரில் வெறிநாய்கள் பொதுமக்களை கடித்துவிட்ட செய்தியறிந்த நகர்மன்ற தலைவர் அவர்கள், 3 நபர்களை கடித்த வெறிநாயை நகராட்சி ஊழியர்களை கொண்டு பிடித்துவிட்டதாகவும், வருகின்ற வாரம் நாய் பிடிப்பதில் தேர்ச்சிபெற்ற குழுமத்தை நம்நகருக்கு அழைத்துவந்து நகர்மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எஞ்சிய நாய்களையும் பிடிக்க ஏற்பாடுசெய்யப்படும் என உத்திரவாதம் அளித்துள்ளார்கள்.
நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிகள் சிறப்புடன் நடைபெற நகர்மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நகர்மன்ற தலைவரின் சேவைகள் மகத்தானது தலைவரின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்